நெருங்கி வரும் சட்டமன்ற தேர்தல்!: கூட்டம் கூட்டமாக அமரவைத்து நேர்காணல் நடத்துகிறது அதிமுக..!!

சென்னை: சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக-வில்  கூட்டம் கூட்டமாக அமரவைத்து நேர்காணல் நடத்தப்படுகிறது. சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்ப்பில் போட்டியிட விருப்பமனு அளித்த நபர்களிடம் அக்கட்சியின் தலைமை நேர்காணல் நடத்தி வருகிறது. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர்கள் என 9 பேர் முன்னிலையில் நேர்காணல் நடைபெற்று வருகிறது. சரியாக காலை 9 மணிக்கு தொடங்கிய நேர்காணலில் முதற்கட்டமாக கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கு விருப்பமனு அளித்தவர்கள் பங்கேற்றுள்ளனர்.

விருப்பமனு அளித்த 8,240 பேரிடம் ஒரேநாளில் நேர்காணல் நடத்த திட்டமிட்டிருப்பதால் தனித்தனியாக நேர்காணல் நடத்தாமல் ஒவ்வொரு தொகுதியிலும் விருப்பமனு தாக்கல் செய்தவர்களை கூட்டம் கூட்டமாக அமரவைத்து நேர்காணல் நடத்துகின்றனர். இன்று மாலைக்குள் அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர் நேர்காணல் நடத்தி முடிக்கப்படுகிறது. வேட்புமனு தாக்கல் தேதி நெருங்கி வருவதால் அடுத்த ஓரிரு நாட்களில் அதிமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட அதிமுக தலைமை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories: