அடேங்கப்பா... ஒரே நாள்ல இவ்ளோ குறைஞ்சிருச்சா?... ரூ.34,000 ஆயிரத்திற்கும் கீழ் சென்றது : இன்ப அதிர்ச்சியில் நகை விரும்பிகள்!!

சென்னை : சென்னையில் இன்று தங்கம் விலை இன்று 232 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. சென்ற பிப்ரவரி மாதம் முழுவதும் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே இருந்ததால் நகை வாங்குவோர் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர். இந்நிலையில், வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் விதமாக தங்கம் விலை இன்று அதிரடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன என்று பார்க்கலாம்...

சென்னையில் இன்று (மார்ச் 4) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,238 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. நேற்று இதன் விலை 4,267 ரூபாயாக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 29 ரூபாய் குறைந்துள்ளது.

அதேபோல,  8 கிராம் ஆபரணத் தங்கம் இன்று 232 ரூபாய் குறைந்து 33,904 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை நேற்று ரூ.71.80 ஆக இருந்தது. இன்று அது ரூ.71.60 ஆகக் குறைந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி 71,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories:

>