சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகார்: சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவு..!

சென்னை: சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகார் சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார். ராஜேஷ் தாஸ் மீது பெண் ஐபிஎஸ் அதிகாரி கொடுத்த புகாரின் அடிப்படையில் சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

தமிழக போலீஸ் துறையில் சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி-யாக பணியாற்றி வருபவர் ராஜேஷ்தாஸ். தமிழகம் முழுவதும் அறியப்பட்டவர். இவர், தூத்துக்குடி எஸ்.பி, மணிமுத்தாறு சிறப்பு காவல்படை கமாண்டண்ட், தென் மண்டல ஐஜி, சென்னை தெற்கு இணை ஆணையர் என பல்வேறு பதவிகளை வகித்திருக்கிறார் இவர். அண்மையில் இவரை தமிழக சட்டம் ஒழுங்கு ஸ்பெஷல் டிஜிபி-யாக தமிழக அரசு நியமித்தது.

இந்த நிலையில், இவர் மீது தமிழக காவல் துறையில் பணியாற்றும் பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் இவர் மீது கடந்த 24ம் தேதி பாலியல் புகார் ஒன்றை தெரிவித்துள்ளார். அதில் அண்மையில் முதலமைச்சர் டெல்டா மாவட்ட சுற்றுப் பயணம் சென்றபோது ஸ்பெஷல் டிஜிபி ராஜேஷ்தாஸ் உடன் சென்றதாகவும், அப்போது அவரை வரவேற்க வந்த ஐபிஎஸ் பெண் அதிகாரி ஒருவரிடன் அத்துமீறி நடந்து கொண்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன. எனினும் அரசுத் தரப்பில் இதை உறுதிப்படுத்தவில்லை.

அதேசமயம் பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் கூறிய பாலியல் புகார் அடிப்படையில் ராஜேஷ்தாஸ் மீது விசாரிக்க குழு அமைத்திருப்பதாக 25ம் தேதி தமிழக அரசு அதிகாரபூர்வமாக அரசாணை வெளியிட்டது. மேலும், பாலியல் புகாரை அடுத்து, இவர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு உள்ளார். இதனையடுத்து, ராஜேஷ் தாஸ் மீது பெண் ஐபிஎஸ் அதிகாரி கொடுத்த புகாரின் அடிப்படையில் சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories:

>