கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக விருப்பமனு தாக்கல் செய்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விருப்பமனு தாக்கல் செய்தார். 2 முறை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாக தேர்வான ஸ்டாலின் 3-வது முறையாக போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். அவருக்காக ஏற்கனவே கட்சி நிர்வாகிகள் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று கோரிக்கை வைத்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது விருப்பமனுவை அளித்துள்ளார்.

அதேபோல், தமிழகத்தில் இருக்கக்கூடிய 234 தொகுதிகளிலும் மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என்று விருப்பமனுவை அளித்துள்ளனர்.  இந்த நிலையில், தற்போது குளத்தூர் தொகுதியில் 3-வது முறையாக போட்டியிடுவதற்காக தனது விருப்பமனுவை அளித்துள்ளார்.

கடந்த 2011 மற்றும் 2016 சட்டப்பேரவை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப்பெற்ற ஸ்டாலின், 2021 சட்டப்பேரவை தேர்தலிலும் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவதற்கு விருப்புமனு தாக்கல் செய்துள்ளார்.திமுகவில் விருப்பமனு அளிக்க இன்றே கடைசிநாள் என்ற நிலையில் மு.க.ஸ்டாலின் விருப்பமனு தாக்கல் செய்தார். தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் விருப்பமனுவை மு.க.ஸ்டாலின் அளித்தார். 1984ஆம் ஆண்டு முதல் தேர்தலில் போட்டியிட்டு வரும் ஸ்டாலின் 9-வது முறையாக போட்டியிடுகிறார்.

Related Stories:

>