இளம்பெண் தீக்குளித்து சாவு

ஆவடி: ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்தவர் சுஜாதா(21). பட்டதாரி. இவர் அதே பகுதியை சேர்ந்த சிலம்பரசன்(24) என்பவரை காதலித்ததாக தெரிகிறது. காதலுக்கு சிலம்பரசன் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால்  மனவேதனையில் இருந்த சிலம்பரசன், கடந்த 22ம் தேதி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றி தகவல் தெரியவந்ததும் சுஜாதா மன அழுத்தத்தில் இருந்துள்ளார்.இந்நிலையில், ஆவடி அருகே கர்லப்பாக்கம்  கிராமத்தில் உள்ள பாட்டி வீட்டுக்கு சுஜாதாவை அவரின் பெற்றோர் அழைத்து வந்தனர். இங்கு வந்த பிறகும் சுஜாதா மனநிலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்று தெரிகிறது. நேற்று முன்தினம் இரவு வீட்டில் தனியாக இருந்த சுஜாதா,  தனது உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீக்குளித்தார். இதில் பலத்த காயமடைந்த சுஜாதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

Related Stories:

>