தேர்தல் அறிவிப்பால் கடைசி நேரத்தில் பட்ஜெட் தாக்கல் 554 கோடி நிதி பற்றாக்குறையில் மாநகராட்சி: சொத்து வரி உயர்வை நிறுத்தி வைத்ததால் நெருக்கடி

சென்னை: சென்னை மாநகராட்சி ஆணையர் 2021-22ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். இதில் நிதி பற்றாக்குறை 554 கோடி என்று கூறப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையொட்டி நேற்று முன்தினம் கடைசி நேரத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 2020-21 நிதி ஆண்டிற்கான சென்னை மாநகராட்சி பட்ஜெட்டை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தாக்கல் செய்துள்ளார். இதன்படி வரும் நிதியாண்டில் சென்னை மாநகராட்சியின் வருவாய் 2,935.26 கோடியாகவும், செலவு 3,481.83 கோடியாகவும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வருவாய் கணக்கில் சொத்து வரி மூலம் 600 கோடியும், தொழில் வரி மூலம் ₹500 கோடியும், முத்திரைத்தாள் வரி மூலம் 150 கோடியும், மாநில நிதிக்குழு மானியம் மூலம் 550 கோடியும், இதர வகைகளில் 1,135.26 கோடியும் வருவாய் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செலவு கணக்கில் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் செலவு 1,758.24 கோடியாகவும், நிர்வாக செலவு 124.58 கோடியாகவும், பராமரிப்பு செலவு 1,055.94 கோடியாகவும், கடனுக்கான வட்டி ₹168 கோடியாகவும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உட்புற மற்றும் பேருந்து சாலை பணிகளுக்காக 470.67 கோடி, மழைநீர் வடிகால் பணிகளுக்காக 1,077 கோடி, புதிய பாலம் அமைக்க பாலங்கள் துறைக்கு 260 கோடி, தெரு விளக்குகளுக்கான வயர்கள், புதிய தெருவிளக்குள் அமைக்க மின்சார துறைக்கு 150 கோடி, திடக் கழிவு மேலாண்மை பணிக்கு 134 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், இயந்திர பொறியியல் துறைக்கு 52.96 கோடியும், கட்டிட துறைக்கு 130 கோடியும், கல்வி துறைக்கு 4.20 கோடியும், சுகாதாரத் துறைக்கு 1.70 கோடியும், குடும்ப நலத்துறைக்கு 1.40 கோடியும், சிறப்பு திட்டங்கள் துறைக்கு 66 கோடியும், சென்னை நதிகள் சீரமைப்பு கழகம் உள்ளிட்ட நிதிகளின் மூலம் பூங்கா மற்றும் விளையாட்டு திடல்கள் துறைக்கு 73 கோடியும், மாமன்ற உறுப்பினர் வார்டு மேம்பாட்டு திட்டத்திற்கு 60 கோடியும், மேயர் சிறப்பு மேம்பாட்டு திட்டத்திற்கு 2 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி நடப்பு நிதியாண்டில் சென்னை மாநகராட்சியில் நிதி பற்றாக்குறை 554 கோடியாக இருக்கும் என்றும், உயர்த்தப்பட்ட சொத்து வரி நிறுத்தி வைக்கப்பட்டதுதான் இந்த பற்றாக்குறைக்கு முக்கிய காரணம் என்றும் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது: வருவாய் இனங்களில் முதன்மையான பங்கு வகிப்பது சொத்து வரியாகும். 2020-21ம் நிதியாண்டு வரவு செலவு திட்டத்தில் 700 கோடி என மதிப்பிடப்பட்டு, சொத்துவரி உயர்த்த பிறப்பிக்கப்பட்ட அரசாணையை திரும்ப பெற்றதால் உயர்த்தப்பட்ட சொத்துவரி சீராய்வு செய்யப்பட்டு 2020-21ம் நிதியாண்டு திருத்திய மதிப்பீட்டில் 550 கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விடுபட்ட சொத்துவரி ஜிஐஎஸ் தொழில்நுட்பத்தின் வாயிலாக கண்டறியப்பட்டு நிர்ணயம் செய்வதால் 2021-22ம் நிதியாண்டில் இந்த வருவாய் 600 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

துறை ரீதியான நிதி ஒதுக்கீடு (கோடியில்)

துறைகள்    20-21ம்

ஆண்டு    20-21ம்

ஆண்டு    21-22ம் ஆண்டு

சாலைகள்    384.11    643.76    470.67            

மழைநீர் வடிகால்    375    847.50    1077            

பாலங்கள்    512    114.00    260                        

மின்சாரம்    120    131    150            

திடக்கழிவு மேலாண்மை    66    40.60    134.10            

இயந்திர

பொறியியல்    43.23    51.38    52.96                        

கட்டிடம்    148    100    130            

கல்வி    7.20    2    4.20                                    

சுகாதாரம்    1.20    1    1.70                        

குடும்ப நலம்    1.60    0.80    1.40            

சிறப்பு திட்டங்கள்    155    121    66            

பூங்கா    70    67.50    73            

நிதி குறைக்கப்பட்ட துறைகள்

பாலங்கள்

கட்டிடம்

கல்வி

சிறப்பு திட்டங்கள்

குடும்ப நலம்

நிதி அதிகரிக்கப்பட்ட துறைகள்

சாலைகள்

மழைநீர் வடிகால்

மின்சாரம்

திடக்கழிவு மேலாண்மை

இயந்திர பொறியியல்

சுகாதாரம்

பூங்கா

Related Stories: