இந்தியாவில் ஊடகங்கள் பாஜகவுக்கு எதிராக கருத்துக்களை தெரிவிக்க முடியாத அளவுக்கு அச்சுறுத்தப்படுகின்றன : ராகுல் காந்தி அட்டாக்

தூத்துக்குடி : தூத்துக்குடி வ.வூ.சி. கல்லூரியில் வழக்கறிஞர்களுடன் ராகுல்காந்தி கலந்துரையாடலில் பேசிய போது, “அரசியல் சாசன அமைப்புகளை பாஜக படிப்படியாக அழித்து வருகிறது பாஜக. நாட்டில் உள்ள ஊடகங்கள் பாஜகவுக்கு எதிராக கருத்துக்களை தெரிவிக்க முடியாத அளவுக்கு அச்சுறுத்தப்படுகின்றன. சிபிஐ, அமலாக்கப் பிரிவு என்னை எதுவும் செய்ய முடியாது, நான் அச்சப்படமாட்டேன். எந்த ஊழல் குற்றச்சாட்டும் இல்லை என்பதால் என்னை பாஜகவால் அச்சுறுத்த முடியவில்லை. ஜனநாயக அமைப்புகளை பாஜக தொடர்ந்து அழித்து வருகிறது.நீதித்துறை உள்பட அனைத்து அமைப்புகளும் மத்திய அரசால் அச்சுறுத்தப்படுவது நாட்டுக்கே சவாலாக உள்ளது.

அரசியல் அமைப்பு சட்டப்படியான கட்டமைப்புகள் அனைத்தையும் பாஜக சீரழித்திவிட்டது.ஜனநாயகத்தை காக்க பாஜக அரசின் நடவடிக்கைகளை தடுப்பது அவசியம்.காங். ஆளும் மாநிலங்களில் எம்.எல்.ஏ.க்களை பல கோடி ரூபாய் கொடுத்து வாங்குகிறது பாஜக . ஆயிரக்கணக்கான கோடிகளை அள்ளி வீசி பாஜக தேர்தலை சந்திக்கிறது. எதிர்கட்சிகள் நிதி திரட்ட அனுமதிப்பதில்லை.பணபலம், அதிகார பலம் பயன்படுத்துவதால் எம்எல்ஏக்கள் அணி மாறி செல்கின்றனர். அனைத்து மாநில உரிமைகளிலும் மத்திய அரசு தலையிடுகிறது; மாநிலங்களை அதிகாரம் இல்லாத வகையில் மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.நாம் இருவர் நமக்கு இருவர் என 4 பேர் மட்டுமே நாட்டை ஆட்சி செய்கின்றனர்.2 பேர் 2 பேருக்காக நினைப்பது மட்டுமே அரசாக இருக்கிறது..” என்றார். 

Related Stories: