விராலிமலை முருகன் கோயிலுக்கு எளிதாக செல்ல ரூ.3.80 கோடியில் அமைத்த மலைப்பாதை திறப்பு

விராலிமலை : விராலிமலை முருகன் கோயிலுக்கு எளிதாக செல்ல ரூ.3.80 கோடியில் புதிதாக அமைக்கப்பட்ட மலைப்பாதை திறப்பு விழா நடந்தது. கலெக்டர் உமா மகேஸ்வரி தலைமை வகித்தார். மலை பாதையை திறந்து வைத்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது: புதிய மலைப்பாதையால் பக்தர்கள் முருகன் கோயிலுக்கு இருசக்கரம் மற்றும் நான்குசக்கர வாகனம் மூலம் நேரடியாக செல்ல முடியும். மலையில் உள்ள முருகன் கோயிலுக்கு பக்தர்கள் 3 நிமிடத்தில் செல்லும் வகையில் மலைப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மலைப்பாதையின் தார்ச்சாலை 360 மீட்டர் நீளம், 7 மீட்டர் அகலமாகும். மலையில் வாகனம் நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு பக்தர்கள் செல்லும் வகையில் 2 லிப்ட் அமைக்கப்பட்டு வருகிறது. ஒரு லிப்ட்டில் 13 பேர் பயணம் செய்யலாம். பேவர் பிளாக் அமைத்தல், கழிவுநீர் வடிகால் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகளுடன் மலைப்பாதை அமைக்கப்படுகிறது என்றார். மத்திய மண்டல ஐஜி ஜெயராம், எஸ்பி பாலாஜி சரவணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related Stories: