குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோயிலில் மாசிமக தேரோட்டம்-திரளான பக்தர்கள் பங்கேற்பு

குளித்தலை : குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோயிலில் மாசி மக தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.கரூர் மாவட்டம் குளித்தலை முற்றிலா முலையம்மை உடனுறை கடம்பவனேஸ்வரர் கோயிலில்17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிலையில் 24ம் தேதி பகல் பல்லக்கு இரவு சுவாமி இந்திர விமானத்தில் வீதி உலா,25ம் தேதி பகல் பல்லக்கு இரவு குதிரை வாகனம் வேடுபரி நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான நேற்று ரதா ரோகனம் காலை 5.30 மணிக்கு மேல் 6 .30 மணிக்குள் நடைபெற்று திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி காலை 10 மணிக்கு மேல் நடைபெற்றது.

இதில் சுற்றுவட்டாரத்தில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். இரவு 7 மணிக்கு மேல் நடராஜர் அபிஷேகம் நடைபெற்றது.இன்று காலை 6:30 மணிக்கு நடராஜர் தரிசனம் திருவீதி உலா 9 மணிக்கு மேல் மஞ்சள் நீராட்டு விழா, காவிரி நதியில் தீர்த்தவாரி, இரவு கற்பக விருட்சம் காமதேனு வாகனத்தில் திருவீதி உலா நடைபெறுகிறது விழாவிற்கான ஏற்பாட்டினை இந்து அறநிலையத்துறை அதிகாரிகள், பணியாளர்கள் செய்திருந்தனர்.

Related Stories: