உடுமலை நகராட்சி 100 ஆண்டு நினைவாக ரூ.48.87 கோடியில் வளர்ச்சி பணி துவக்கம்

உடுமலை :  உடுமலை நகராட்சி தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் ஆவதையொட்டி,  ரூ.48.87 கோடி ஒதுக்கப்பட்டு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. உடுமலை நகராட்சி தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் ஆவதையொட்டி,  ரூ.48.87 கோடியில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, வி.பி.புரத்தில் கூடுதல் பேருந்து நிலையம், கழுத்தறுத்தான் பள்ளத்தில் தடுப்பு சுவர், ராஜேந்திரா சாலையில் வாரச்சந்தை மேம்படுத்துதல், திருப்பூர் சாலை, தளி சாலை, எலையமுத்தூர் சாலை, ராஜேந்திரா சாலை, பழனி சாலை, தாராபுரம் சாலைகளின் நடுவில் தெருவிளக்கு அமைத்தல், நகராட்சி புதிய அலுவலகத்தில் உட்கட்டமைப்பு மற்றும் நினைத்தூன் அமைத்தல், அண்ணா பூங்கா, ஜிடிவி நகர், ஸ்டேட் வங்கி காலனி, சாத்விக் நகர், ராஜலட்சுமி நகர் ஆகிய இடங்களில் பூங்காக்களை மேம்படுத்தி சிறுவர் விளையாட்டு சாதனங்கள் அமைத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இதற்கான பூமிபூஜை நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் நகராட்சி மண்டல துணை ஆணையர் சரவணன், நகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி, பொறியாளர் தங்கராஜ், உதவி பொறியாளர் பாலா, நில அளவையர் பாபு, மின்பிரிவு மேற்பார்வையாளர் துரைராஜ், சுகாதார ஆய்வாளர்கள் செல்வகுமார், செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: