கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து 3வது முறையாக கிராம மக்கள் சாலை மறியல்: 50 பெண்கள் உட்பட 100 பேர் கைது

செய்யூர்: மதுராந்தகம் அடுத்த தச்சூர் பகுதியில் கடந்த ஒரு மாதமாக தனியார் கல்குவாரி இயங்குகிறது. இதற்கு, தச்சூர் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, ஏற்கனவே 2 முறை சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் சமரசம் பேசிய அதிகாரிகள், கல்குவாரியை அகற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டப்படுகிறது. இந்நிலையில், கல்குவாரியை உடனடியாக அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நேற்று காலை நாம் தமிழர் கட்சியினர் தலைமையில் தச்சூர் கிராம பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் தச்சூர், பவுஞ்சூர், மதுராந்தகம் மும்முனை சந்திப்பு சாலையில் 3வது முறையாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து அணைக்கட்டு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்டதாக, 50 பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோரை கைது செய்து, பவுஞ்சூரில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். மாலையில் அவர்களை விடுவித்தனர்.

Related Stories: