அதிமுக, பாஜவுடன் எந்த தொடர்பும் இல்லை: டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி

கோவை:  புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கோவையில் நேற்று அளித்த பேட்டி:  பட்டியல் பிரிவில் இருந்து 6 உட்பிரிவுகளை ஒன்றாக்கி, தேவேந்திர குல வேளாளர் என்ற ஒரே பெயரில் அழைக்கவேண்டும், பட்டியல் பிரிவில் இருந்து இந்த உட்பிரிவுகளை விலக்கவேண்டும் என தொடர்ந்து போராடி வருகிறோம். ஆனால், வெறும் பெயர் மாற்றம் மட்டும் செய்து மத்திய அரசு அறிவித்துள்ளது.  இது போதாது. மத்திய அரசின் அறிவிப்பு வெறும் அடையாளம் மட்டுமே. எங்களுக்கு அங்கீகாரம் வேண்டும். இதுதொடர்பாக, கோவை வந்த பிரதமர் மோடியிடம் கோரிக்கை மனு அளித்துள்ளோம்.  பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலை உயர்வால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுகிறார்கள்.

இதனால், அத்தியாவசிய பொருட்களின் விலை தாறுமாறாக உயர்கிறது. இந்த விலை உயர்வுக்கு மத்திய, மாநில அரசுகள் இரண்டுமே காரணம். எனவே, விலை உயர்வை உடனே வாபஸ் பெற வலியுறுத்தி  மார்ச் 1ம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். நான், சிவகங்கை மாவட்டத்தில் பங்கேற்க உள்ளேன். தமிழக சட்டமன்ற தேர்தல் நிலைப்பாடு குறித்து மார்ச் முதல் வாரம் உயர்மட்ட குழு கூட்டம் கூடி முடிவெடுத்து அறிவிப்போம். அதிமுக, பாஜவுடன் கடந்த 2 ஆண்டாக புதிய தமிழகத்துக்கு எந்த தொடர்பும் இல்லை என்றார்.

Related Stories: