தேர்தலுக்கும் கடன் தள்ளுபடி அறிவிப்புக்கு எந்த சம்பந்தமும் இல்லை!: முதல்வர் பழனிசாமி விளக்கம்..!!

சென்னை: சட்டமன்ற தேர்தலுக்காக திட்டங்களை அறிவிக்கவில்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர் தேர்தலுக்கும் கடன் தள்ளுபடி அறிவிப்புக்கு எந்த சம்பந்தமும் இல்லை என குறிப்பிட்டார். கடன் சுமையை குறைக்க எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். காவல் அதிகாரி மீதான புகார் குறித்து குழு விசாரணைக்கு பிறகே உண்மை தெரியவரும் எனவும் குறிப்பிட்டார். 

Related Stories:

>