பங்குசந்தையில் சென்செக்ஸ் 1,200 புள்ளிகள், நிஃப்டி 360 புள்ளிகள் சரிவு

மும்பை: மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,268 புள்ளிகளும், தேசிய பங்குச்சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டி 364 புள்ளிகளும் சரிந்துள்ளது. மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 49,770 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டி 364 புள்ளிகள் சரிந்து 14,732 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் அதிகபட்சமாக அல்ட்ராடெக்சிமெண்ட் 12.19, சன் பார்மா 7.32, டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ் 6.57, மாருதி சுசூகி 4.28, என்டிபிசி 1.04 புள்ளிகள் உயர்ந்தன. ஹெச்டிஎப்சி பேங்க் 197.90, ஹெச்டிஎப்சி 143.34, ஐசிஐசிஐ பேங்க் 124.06, ரிலையன்ஸ் 97.99, கோடக் மஹிந்திரா 86.77 புள்ளிகள் சரிந்தது.

தேசிய பங்குசந்தையில் அதிகபட்சமாக சன் பார்மா 2.03, அல்ட்ராடெக்சிமெண்ட் 1.98, ஸ்ரீ சிமெண்ட்ஸ் 1.60, டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ் 1.35, மாருதி சுசூகி 1.16 புள்ளிகள் உயர்ந்தது. ஹெச்டிஎப்சி பேங்க் 53.24, ஹெச்டிஎப்சி 37.71, ஐசிஐசிஐ பேங்க் 32.77, ரிலையன்ஸ் 24.88, பஜாஜ் பைனான்ஸ் 23.83 புள்ளிகள் சரிந்தது.

Related Stories:

>