தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 4,500 துணை ராணுவப் படை வீரர்கள் சென்னை வருகை

சென்னை: சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்காக மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் ரயில் மூலம் சென்னை வந்தனர். தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் இறுதியில் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையொட்டி, தீவிர பிரச்சாரத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றனர்.  

மேலும் தேர்தல் நேரத்தில் உருவாகும் இடர்ப்பாடுகளை தவிர்க்க மத்திய அரசும் தேவையான பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதனிடையே, சட்டப் பேரவை தேர்தல் பாதுகாப்பினை உறுதி செய்யும் பொருட்டு, இன்று மத்திய ஆயுதப் படையின் 45 கம்பெனி காவல்துறையினர், தேர்தல் பணிக்காக தமிழகத்திற்கு வர உள்ளதாக முன்னதாக தமிழக தேர்தல் அதிகாரிகள் சத்யபிரதா சாகு தகவல் தெரிவித்து இருந்தார்.

அதன் அடிப்படையில் இன்று முதற்கட்டமாக 4,500 துணை ராணுவப் படை வீரர்கள் சென்னை வந்துள்ளனர். அதில் மங்களூருவில் இருந்து ரயிலில் வந்த 92 பாதுகாப்பு படை வீரர்கள் பேருந்து மூலம் கிருஷ்ணகிரி செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது. துணை ராணுவப் படை வீரர்கள் வருகையையொட்டி தமிழகத்தில் தேர்தல் களம் தீவிரம் அடைந்துள்ளது.

Related Stories: