முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை: அப்போலோ டாக்டர்கள் சாதனை

சென்னை: அப்போலோ மருத்துவமனையில் 66 வயதான ஒரு பெண்மணிக்கு ‘பாஸ்ட் டிராக் புல் நீ ரீப்ளேஸ்மெடின்ட்’ எனப்படும் 3 நாட்கள் மட்டும் மருத்துவமனையில் தங்கி டிஸ்சார்ஜ் செய்யும்  அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டிருக்கிறது. இதுகுறித்து, அப்போலோ மருத்துவமனை குழுமத்தின் நிர்வாக இயக்குநர் சுனீதா ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது, “டாக்டர் மதன் திருவெங்கடா மற்றும் அவரது குழுவினர் நோயாளிக்கு ஒரு புதிய நவீன மருத்துவ நடைமுறையை செய்துள்ளனர். நோயாளிகளின் அறுவை சிகிச்சையின் அதே நாளில் வீட்டிற்கு செல்ல அனுமதிக்கும் துல்லியமான கருவிகளை பயன்படுத்துகிறது,” என்றார். எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் ஆலோசகர் டாக்டர் மாதன் திருவெங்கடா கூறுகையில், “முழங்கால்களின் கடுமையான மூட்டு வலிக்கு முழு முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை அல்லது டி.கே.ஆர் மட்டுமே அனைவருக்கும் தற்போது உள்ள ஒரே  தீர்வு,” என்றார்.

Related Stories:

>