அருங்காட்சியகம், அறிவுசார்பூங்கா திறக்கப்பட்ட 2 மணி நேரத்திலேயே ஜெயலலிதா நினைவிடம் மீண்டும் மூடல்: பொதுமக்கள் அதிர்ச்சி

சென்னை: ஜெயலலிதா நினைவிடத்தில் அருங்காட்சியகம், அறிவுசார் பூங்காவை முதல்வர் எடப்பாடி திறந்து வைத்தார். இந்த நிலையில் திறந்த 2 மணி நேரத்தில் மீண்டும் மூடப்பட்டு இருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதை தொடர்ந்து ஜெயலலிதா நினைவிடத்தில் அறிவுசார் பூங்கா மற்றும் அருங்காட்சியகத்தை முதல்வர் எடப்பாடி திறந்து வைத்தார். பின்னர் அவர்கள் அருங்காட்சியகம், அறிவுசார்பூங்காவை பார்வையிட்டனர்.

இந்நிலையில், ஜெயலலிதா அருங்காட்சியகம், அறிவுசார் பூங்காவை பொது மக்க ளுக்கு திறந்தால் சசிகலா வருவ தற்கான வாய்ப்பு  இருப் பதாக தகவல் பரவியது. இதையடுத்து ஜெயலலிதா நினைவிடம் திறந்த 2 மணி நேரத்தில் மீண்டும் மூடப்பட்டன. இதனால், ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். ஏற்கனவே சசிகலா விடுதலை அைடந்தவுடன் நேரடியாக ஜெயலலிதா நினைவிடம் வருவார் என்பதால் திறக்கப்பட்ட ஜெயலலிதா நினைவிடத்தை அதிரடியாக மூடினர். இந்த நிலையில் தற்போது மீண்டும் ஜெயலலிதா நினைவிடம் திறந்த 2 மணி நேரத்தில் மூடப்பட்டு இருப்பது அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>