கோல்கீப்பராக இருப்பேன்: வங்காளத்தை வங்காளிகள் தான் ஆள வேண்டும்; மோடி அல்ல: மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரச்சாரம்.!!!!

கொல்கத்தா: வங்காளத்தை மோடி ஆள முடியாது என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். தமிழகம், அசாம் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில், மாநில மற்றும் தேசிய கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, மேற்கு வங்க  மாநிலத்தில் ஆட்சியை தக்க வைக்க மாநில முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். மேற்கு  வங்கத்தில் ஆட்சியை பிடிக்க பாஜகவும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், மேற்கு வங்க மாநிலம் ஹூக்லியில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் சார்பில் நடைபெற்ற பேரணயில் பங்கேற்று உரையாற்றிய மாநில முதல்வரும்  திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் மிகப்பெரிய கலகக்காரர் என்று விமர்சித்துள்ளார். நவம்பர் மாதம்  அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த டொனால்ட் டிரம்பை விட பிரதமருக்கு ஒரு மோசமான விதி காத்திருக்கிறது என்றும் கூறினார். வன்முறையிலிருந்து  எதையும் பெற முடியாது என்றும் மம்தா தெரிவித்தார்.

சட்டமன்றத் தேர்தலில் நான் கோல்கீப்பராக இருப்பேன், பாஜகவுக்கு ஒரு கோல் கூட அடிக்க முடியாது என்றும் தெரிவித்தார். வங்காளத்தை வங்காளிகள் தான் ஆள  வேண்டும்; குஜராத்திகள் வங்காளத்தை ஆளாது. மோடி வங்காளத்தை ஆள மாட்டார். குண்டாஸ் (குற்றவாளிகள்) வங்காளத்தை ஆள மாட்டார்கள் என்றும் ஆவேசமாக  பேசினார். ஒவ்வொரு முறையும் நீங்கள் (பிஜேபி) திரிணாமுல் காங்கிரஸ் தோலாபாஜ் என்று கூறினாலும், நீங்கள் (பிஜேபி) டங்காபாஸ் (கலகக்காரர்) மற்றும்  தண்டபாஸ்(அரக்கன்) என்று சொல்கிறேன் என்றார்.

Related Stories:

>