தமிழக மீனவர்களை தாக்கக் கூடாது என இலங்கைக்கு கண்டிப்பு: அன்புமணி கேள்விக்கு வெளியுறவுத் துறை அமைச்சர் பதில்

சென்னை: மாநிலங்களவையில் மீனவர்கள் பிரச்னை குறித்து பாமக உறுப்பினர் அன்புமணி கேள்வி எழுப்பி பேசினார். இவரது கேள்விக்கு விடையளித்து வெளியுறவுத்துறை இணையமைச்சர் முரளிதரன் பேசியதாவது: மீனவர்கள் நலன் சார்ந்த இரு தரப்பு பிரச்னைகள் குறித்து விவாதிப்பதற்காக அமைக்கப்பட்ட கூட்டுப் பணிக்குழுவின் கூட்டம் கடந்த டிசம்பர் 30ம்தேதி நடைபெற்றது. கடந்த மாதம் 18ம்தேதி அன்று தமிழக மீனவர்களின் படகுடன் இலங்கை கடற்படை படகு மோதியதைத் தொடர்ந்து அந்தப் படகு மூழ்கியதில் 4 மீனவர்கள் உயிரிழந்தனர். இது தொடர்பாக இலங்கை வெளியுறவு அமைச்சரிடம் நமது தூதர் மூலம் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மீனவர்கள் குறித்த பிரச்சினைகளை மனிதாபிமானத்துடன் அணுக வேண்டும் என்று இலங்கை அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்த நிகழ்வுகள் எதுவும் இனி நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் இலங்கை அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: