திருவில்லிபுத்தூரில் 2 இடங்களில் குழாய்கள் உடைந்து ஆறாக ஓடிய குடிநீர்

திருவில்லிபுத்தூர் : திருவில்லிபுத்தூர் நகரில் குடிநீர் குழாய் உடைந்து சாலைகளில் குடிநீர் வீணாக ஓடுகிறது. எனவே, இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருவில்லிபுத்தூர் நகரை பொறுத்தவரை நகராட்சி சார்பில் தாமிரபரணி, குறிப்பிட்ட சில பகுதிகளில் செண்பகத்தோப்பு தண்ணீர் குடிநீருக்காக வழங்கப்படுகிறது. விநியோகம் முறைப்படுத்துதல் முறையாக இல்லாததால் ஐந்து நாட்களுக்கு ஒரு முறை, ஏழு நாள்களுக்கு ஒரு முறை, 10 நாட்களுக்கு ஒருமுறை என குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் குறிப்பிட்ட சில பகுதிகளில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக சாலையில் ஓடுகிறது. திருவில்லிபுத்தூர் மேலரத வீதி பகுதியில் அருகே உள்ள சாலையில் குழாய் உடைந்து குடிநீர் சாலையில் ஆறாக ஓடியது.அதேபோல் திருவில்லிபுத்தூர் திருமுக்குளம் அருகில் குழாய்களிலிருந்து உடைந்து குடிநீர் அந்த பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயில் கலந்து வருகிறது.

நகராட்சி குடிநீர் வழங்கல் பிரிவு அதிகாரிகள், சரி செய்தாலும் அடிக்கடி இந்த மாதிரி பிரச்னை ஏற்பட்டு குடிநீர் வீணாகிறது. எனவே, குழாய் உடைப்புகளை கண்டறிந்து நிரந்தர தீர்வு காண வேண்டுமென திருவில்லிபுத்தூர் நகர் பொதுமக்கள் நகராட்சி அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: