வளிமண்டல மேலடுக்கு சுழற்சி..! தமிழகத்தில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: வளிமண்டலத்தின் மேலடுக்கில் நிலவும் சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேல் அடுக்கில் மேற்கு திசை காற்று சுழற்சி காரணமாகவும், கீழ் அடுக்கில் கிழக்கு திசை காற்றின் சுழற்சி காரணமாக தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் 2 நாட்கள் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் நேற்று அறிவித்திருந்தது.

இந்நிலையில் புதுச்சேரியில் இன்று அதிகாலை முதல் பெய்த கனமழையால் முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. புதுச்சேரியில் அதிகபட்சமாக 2செ.மீ.வரை மழை பதிவாகியுள்ளது. சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் பொதுமக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் நா.புவியரசன் நேற்று கூறியதாவது; வளிமண்டல மேலடுக்கில் மேற்கு திசை காற்றில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாகவும், கீழடுக்கில் கிழக்கு திசை காற்றில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் ஆகிய இரண்டு நாட்களுக்கு இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

பிப்ரவரி 23, 24-ஆம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலையா நிலவும். சென்னையைப் பொருத்தவரை இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.

Related Stories: