இந்தியன் ஆயில் நிறுவன தென்மண்டல செயல் இயக்குநராக சைலேந்திரா பொறுப்பேற்பு

சென்னை: இந்தியன் ஆயில் நிறுவன தென்மண்டல செயல் இயக்குநராக சைலேந்திரா பொறுப்பேற்பு கொண்டார். தென்மண்டலம் இந்தியன் ஆயில்  நிறுவனத்தின் முக்கியத் துறைகளான மனிதவளம், நிதி, எல்பிஜி-எரிபொருள் லாஜிஸ்டிக்ஸ், ஒப்பந்தங்கள், பாதுகாப்பு, விமானம் சார் துறை மற்றும் தரக் கட்டுப்பாடு உள்ளிட்ட துறைகளுக்கு இந்த வட்டாரத்தின் பொறுப்பாளராக இருக்கும் சைலேந்திரா மேற்குறிப்பிட்ட ஐந்து தென்மாநிலங்களுக்கான பெட்ரோலிய நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியன் ஆயில் நிறுவனத்தின் எல்பிஜி சார்ந்த துறையில் தம்முடைய நீண்ட நெடிய பணிக்காலத்தில் ஆட்டோ எல்பிஜி நிலையங்கள் பற்றிய விரிவான கொள்கைகள் உருவாக காரணமாக இருந்தவர்.

இந்தியா முழுவதும் ஆட்டோ எல்பிஜி நிலையங்களின் கட்டமைப்பு உருவாக்கத்தைக் கண்காணித்து மேற்பார்வையிட்டவர். இவர் ராஜஸ்தான் மற்றும் கர்நாடக மாநிலத்தின் எல்பிஜி தலைமைப் பொறுப்பாளராக இருந்த சமயத்தில் பிரதமரின் உஜ்வலா திட்டத்தை வெற்றிகரமாக அமல்படுத்தினார். உலக நாடுகளில், அதிக அளவில் பயணம் மேற்கொண்டுள்ள சைலேந்திரா, தம்முடைய தொழில் நுட்பம் சார்ந்த ஆய்வறிக்கைகளை டோக்யோ மற்றும் சியோல் மாநாட்டில் சமர்ப்பித்துள்ளார்.

Related Stories: