நாளை 10-ம் கட்ட பேச்சுவார்த்தை: லடாக் பாங்காங் ஏரியில் இருந்த படைகள் முழுமையாக வாபஸ்...இந்திய ராணுவம் அறிவிப்பு.!!!

டெல்லி: லடாக் பாங்காங் ஏரியில் முழுமையாக படைகளை வாபஸ் பெற்றுள்ளதாக இந்திய ராணுவம் அறிவித்துள்ளது. இந்தியவில் உள்ள லடாக் எல்லையில் பாங்காங் ஏரி பகுதியில் சீன ராணுவ வீரர்கள் அத்துமீறி நுழைய முயற்சித்ததால், இரு தரப்பினர் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதேபோன்ற தொடர் நிகழ்வுகளால் லடாக் எல்லையில் பதற்றம் ஏற்பட்டு வந்தது. ராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு எட்டப்படவில்லை. இந்தநிலையில் இந்திய-சீன ராணுவ கமாண்டர் இடையான 9-ம் கட்ட பேச்சுவார்த்தையில் பாங்காங் பகுதியில் இருந்து படைகளை பின்வாங்க முடிவு எட்டப்பட்டது.

இதனையடுத்து இந்தியாவோ, சீனாவும் லடாக் எல்லையில் இருந்து படைகளை பின் வாங்கியதால் லடாக்கில் இயல்பு நிலை திரும்பியுள்ளது. இந்நிலையில், லடாக் பாங்காங் ஏரியின் தெற்கு, வடக்கு கரை பகுதியில் இருந்த படைகள் முழுமையாக வாபஸ் பெற்றுள்ளதாக இந்திய ராணுவம் அறிவித்துள்ளது. எல்லையில் பாதுகாப்பு பணியில் இருந்த படையினர் தொலைவிலுள்ள முகாம்களுக்கு சென்றுள்ளனர் என்றும் இந்தியா  - சீனா இடையில் கமாண்டர் அளவிலான பேச்சு நடக்க உள்ளதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

இதற்கு ஏற்ப, எல்லையில் பதற்றம் தணிந்துள்ள நிலையில், இந்திய-சீன ராணுவ கமாண்டோ மட்டத்திலான 10-வது கட்ட பேச்சுவார்த்தை நாளை காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. எல்லையில் படைகளை குறைப்பது, லடாக்கில் அமைதி நீடிப்பதை உறுதி செய்வது குறித்தும் இரு தரப்பு வீரர்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளனர்.

Related Stories: