பாஜ.வில் இணைகிறார் மெட்ரோ மேன் ஸ்ரீதரன்: கேரள தேர்தலில் போட்டியிட விருப்பம்

புதுடெல்லி: நாட்டின் மெட்ரோ மேன்’ எனப்படும்  ரயில்வே மூத்த பொறியாளர் தரன் பாஜ.வில் இணைகிறார். டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் முன்னாள் தலைவரான ஸ்ரீதரன் (88). இந்திய பெருநகர மக்களின் ரத்த ஓட்டமாக கருதப்படும் மெட்ரோ ரயில் சேவையின் மூளையாக செயல்பட்டு அதனை வடிவமைத்து கொடுத்தவர். ஓய்வு பெற்ற பிறகு, கடந்த 10 ஆண்டுகளாக மலப்புரத்தில் உள்ள சொந்த வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், இவர் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பின் போது, வரும் ஞாயிற்றுக்கிழமை கேரளாவில் பாஜ சார்பில் நடைபெறவுள்ள விஜய் யாத்ரா நிகழ்ச்சியின் போது அதிகாரப்பூர்வமாக பாஜ.வில் இணைய உள்ளதாக தெரிவித்தார். மேலும், கேரளாவில் நடைபெற இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார். 75 வயதை கடந்ததால், மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷிக்கு தேர்தலில் போட்டியிட தலைமை சீட் தரவில்லை. பாஜ.வில் இந்த கட்டுப்பாடு இருப்பதால், 88 வயதாகும் ஸ்ரீதரனுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

இது குறித்து பேசிய ஸ்ரீதரன்,  கடந்த 10 ஆண்டுகளில் பல அரசுகளை பார்த்து விட்டேன். மக்களுக்கு என்ன செய்ய முடியுமோ, அதைக் கூட அவர்கள் செய்வதில்லை. சொந்த நலனுக்காக நாட்டை சீர்குலைத்து விட்டன. எனது பங்களிப்பை மக்களுக்கு நேரடியாக வழங்கும் வகையில் பாஜ.வில் இணைய இருக்கிறேன்,’’ என்று தெரிவித்தார். இணைவதற்கான காரணம்: லவ் ஜிகாத்’ என்ற பெயரில் இந்து பெண்களை திருமணத்துக்காக கட்டாய மதமாற்றம் செய்வதை தடுத்தது, சபரிமலைக்கு செல்ல பெண்களை அனுமதித்தது போன்ற சர்ச்சைக்குரிய விவகாரங்களில் பாஜ. எடுத்த நடவடிக்கைகளினால் ஈர்க்கப்பட்டதால், பாஜ.வில் சேர உள்ளதாக ஸ்ரீதரன் கூறியுள்ளார்.

Related Stories: