உழைத்து வாழ வேண்டும் பஞ்சாயத்து தலைவராக அசத்தும் 88 வயது பாட்டி: அதிகாரியிடம் ஆங்கிலத்தில் சரமாரி கேள்வி

சித்ரதுர்கா: கிராம பஞ்சாயத்து தலைவராக இருக்கும் 88 வயது மூதாட்டி கிராம வளர்ச்சிக்கு மட்டுமில்லாமல், தனது நிலத்திலும் உழைத்து வருகிறார். பஞ்சாயத்து திட்டங்கள் குறித்து அதிகாரியிடம் ஆங்கிலத்தில் சரமாரி கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள சிக்கயம்மிகனூரு கிராம பஞ்சாயத்து உள்ளது. இந்த கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட சிக்கனகட்டி, கொடகவள்ளி, கொடகவள்ளி ஹட்டி, கோட்டாஹாளு, ஹொசஹள்ளி, அய்யனஹள்ளி ஆகிய கிராமங்கள் உள்ளது. சுமார் 7,500 மக்கள் வசிக்கிறார்கள். இக்கிராம பஞ்சாயத்து தலைவராக 88 வயதான மூதாட்டி திராக்‌ஷகாயணம்மா தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த காலத்தில் 7ம் வகுப்பு (லோயர் செகன்டரி) முடித்துள்ள பாட்டி சரளமாக ஆங்கிலம், கன்னடம் பேசுகிறார். அவருக்கு மூன்று ஆண், மூன்று பெண் பிள்ளைகள் உள்ளனர். இவர்கள் வெவ்வேறு ஊர்களில் தங்கியுள்ளனர்.  சொந்த கிராமத்தில் தனிமையில் இருக்கும் மூதாட்டி  கிராம பஞ்சாயத்து தலைவியாக

தேர்ந்தெடுக்கப்பட்டபின் தாலுகா கிராம வளர்ச்சி அதிகாரியை கிராமத்திற்கு அழைத்து , கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஒவ்வொரு கிராமத்தில் உள்ள வீடுகளுக்கும் தூய்மை இந்தியா திட்டத்தில் கழிப்பறை கட்டி கொடுக்க வேண்டும்.

கிராமங்களில் உள்ள அரசு பள்ளிகளில் கட்டிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். சீரான சாலை, சுத்தமான குடிநீர், தெருவிளக்கு வசதிகள் செய்ய வேண்டும். எங்கள் கிராம பஞ்சாயத்தில் வளர்ச்சி திட்டங்கள் செயல்

படுத்த மத்திய, மாநில அரசுகள், நபார்டு வங்கி, உலக வங்கிகள் மூலம் ஒதுக்கீடு செய்துள்ள நிதி எவ்வளவு, அந்த நிதியை கொண்டு என்னென்ன வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்த திட்ட வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது. வளர்ச்சி பணிகள் முடிப்பதற்கான காலக்கெடு எப்போது என பல கேள்விகளை கிராம மக்கள் முன்னிலையில் கன்னடம் மற்றும் ஆங்கில ெமாழியில் எழுப்பினார். மூதாட்டியின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் அதிகாரி தவித்தார். வரும் 15 நாட்களுக்குள் முழு விவரத்தை கிராமத்திற்கு வந்து கொடுக்க வேண்டும் என்று அதிகாரிக்கு உத்தரவிட்ட மூதாட்டி, உண்மையான கிராம சுயராஜ்ஜியம் வெற்றி பெற வேண்டும். அதற்காக நான் உழைப்பேன் என்றார்.

Related Stories: