அந்தரகட்டம்மா திருவிழாவில் ஆயிரக்கணக்கான ஆடுகள் விற்பனை

சிக்கமகளூரு: துர்கை அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான ஆடுகள் விற்பனை செய்யப்பட்ட சம்பவம் கடூர் அருகே நடந்துள்ளது. சிக்கமகளூரு மாவட்டம் கடூர்  தாலுகாவில் உள்ளது அந்தரகட்டே கிராமம். இந்த கிராமத்தில் துர்கை அம்மன் கோயில் உள்ளது. அறநிலையத்துறையினர் கீழ் இயங்கி வரும்  இக்கோயிலில் ஆண்டுதோறும் நான்கு நாட்கள் திருவிழா நடக்கும். அப்போது,  வெளியூர்களில் உள்ள உறவினர்களை அழைத்து கோயிலில் கிடா வெட்டி விருந்து  வைத்து வழிபடுவர். இத்திருவிழாவில் சிக்கமகளூரு, தரிகெரே, கடூர்  உள்ளிட்ட பகுதி மக்கள் கலந்து கொண்டு கோயில்களில் கிடா வெட்டி விருந்து  வைப்பார்கள். அப்போது ஆடுகள் விற்பனை ஜோராக நடக்கும். இந்த ஆண்டு  திருவிழா கடூர் ஏபிஎம்சி வளாகத்தில் ஆடுகள் விற்பனை நடந்தது.

இதில் வடகர்நாடக  மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான ஆடுகள் விற்பனைக்கு வந்தன.  இதை ஏலம் விடப்பட்டு பக்தர்கள் வாங்கி நேர்த்தி கடன் செலுத்தினர். அதிக பட்சமாக ஹாவேரி மாவட்டத்தை சேர்ந்த ஆடு ₹25 ஆயிரத்திறகு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: