2023-ல் ஒடிசாவில் ஹாக்கி உலகக் கோப்பை போட்டி: ரூர்கேலாவில் மிகப்பெரிய மைதானத்திற்கு அடிக்கல் நாட்டினார் மாநில முதல்வர் நவீன் பட்நாயக்.!!!

புவனேஸ்வர்: ரூர்கேலாவில் மிகப்பெரிய ஹாக்கி மைதானத்திற்கு ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் அடிக்கல்  நாட்டினார். ஒடிசா பகுதியில் வசித்து வந்த பழங்குடியினரின் முக்கிய விளையாட்டு ஹாக்கியாக இருந்தது.  இதனால் ஒடிசாவில் ஹாக்கி விளையாட்டு மிகவும் பிரபலமான ஒன்றாக இருந்து வருகிறது. ஒடிசா  தலைநகர் புவனேஸ்வரில் கலிங்கா ஹாக்கி மைதானம் அமைந்துள்ளது.

இதற்கிடையே, ஒடிசாவின் ரூர்கேலா பகுதியின் சுந்தர்கர் என்ற இடத்தில் இந்தியாவின் மிகப் பெரிய ஹாக்கி  மைதானம் அமைக்கப்படும் என்று ஒடிசா முதல்வர் நவீன் பட்னாயக் தெரிவித்திருந்தார். அதன்படி, இன்று  ரூர்கேலாவில் மிகப் பெரிய ஹாக்கி மைதானம் அமைக்கும் பணிக்கு ஒடிசா முதல்வர் நவீன் பட்னாயக்  அடிக்கல் நாட்டினார். இந்த மைதானம் 20 ஆயிரம் பேர் அமர்ந்து ஹாக்கி போட்டியை நேரில் பார்க்கும்  வகையில் கட்டப்பட உள்ளது. இது இந்தியாவிலேயே மிகப் பெரிய ஹாக்கி மைதானமாக மைதானம்  அமையவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே, ஒடிசாவில் 2018-ம் ஆண்டு உலகக் கோப்பை ஹாக்கி தொடர் நடைபெற்றது. இதில் பெல்ஜியம்  அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இதனைத் தொடர்ந்து 2023-ம் ஆண்டு 15-வது உலகக் கோப்பை தொடர்  மீண்டும் ஒடிசாவில் நடைபெற உள்ளது. புவனேஸ்வர் மற்றும் ரூர்கேலாவில் நடத்தப்படும் ஆண்கள் ஹாக்கி  உலகக் கோப்பை 2023-க்கு முன்னதாக ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் புதிய மைதானத்திற்கு அடிக்கல்  நாட்டியுள்ளார்.

Related Stories: