கோவையில் 1,600 கோடி மதிப்பிலான அவிநாசி சாலை மேம்பாலம்: 8 பேரின் நிலம் கையகப்படுத்த உயர்நீதிமன்றம் இடைக்கால தடை!

சென்னை: கோவையில் 1,600 கோடி ரூபாய் மதிப்பிலான அவிநாசி சாலை மேம்பால பணிக்காக நிலங்களை கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. கோவை அவிநாசி சாலையில் உப்பிலிபாளையம் சந்திப்பு பகுதியில் துவங்கி சித்ரா கோல்டுவின்ஸ் வரை1,621 கோடி ரூபாய் மதிப்பில் 10 கி.மீ. தூரம் உயர்நிலை மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. இதனை 17.25 மீட்டர் அகலத்தில் 4 வழிச்சாலையாக 305 தாங்கு தூண்களுடன் 2 ஆண்டுகளில் கட்டிமுடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சமீபத்தில் சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்த பாலத்திற்கு காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். ஆனால் இந்த பாலத்திற்கு தங்கள் நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து கோவையை சேர்ந்த 8 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில் பாலம் கட்டுவதற்கு முறையான சுற்றுசூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை என்றும், உரிய அனுமதி பெறாமலேயே பணிகளை தொடங்கி விட்டதாகவும், அதில் குற்றம் சாட்டியிருந்தனர்.

இந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது சட்ட விதிகளுக்கு முரணான மேம்பால பணிகள் நடக்க கூடாது தற்போதைய நிலையில் நான் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. தூண்கள் அமைக்க மனுதாரர்கள் நிலத்தை கையகப்படுத்த கூடாது என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் 2-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Stories: