மாற்றுத்திறனாளி வாகனத்திற்கு 4 ஆண்டாக அலையும் டிரைவர்: அரசு அதிகாரிகள் கவனிப்பார்களா?

கம்பம்: கம்பத்தில் உள்ள கம்பம்மெட்டு காலனியைச் சேர்ந்தவர் சம்ஸ் (38), டிரைவர்.இவர், கடந்த 2010ல் நடந்த சாலை விபத்தில், தனது இடது காலில் தொடை வரை இழந்தார். 85 சதவீதம் ஊனம் என அதிகாரிகள் அளித்த சான்றுடன், கடந்த 2017ல் தேனி மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலகத்தில் இருசக்கர வாகனத்திற்கு விண்ணப்பித்தார். ஆனால், இதுவரை நடவடிக்கை இல்லை.வாகனம் இல்லாததால் கட்டைக் கால்களுடன், அருகில் உள்ள கடைகளுக்கு சென்று வருகிறார்.இதனால், தொடைப்பகுதி முழுவதும் புண்ணாகி ரத்தம் வழிகிறது.

இது குறித்து தேனி மாவட்ட அலுவலகத்திற்கு சென்றால், பதிவு மூப்பு உங்களுக்கு வரவில்லை என அதிகாரிகள் துரத்துவதாக மாற்றுத்திறனாளி வேதனைப்படுகிறார். போதிய வருமானம் இல்லாத நிலையில் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் சாப்பாட்டிற்கே மிகவும் கஷ்டமான சூழலில் வசிப்பதாகவும், தனக்கு இரு சக்கர வாகனம் கிடைத்தால், ஏதாவது கைத்தொழில் செய்து பிழைப்பு நடத்தி, குடும்பத்தை காப்பாற்றுவேன், இருசக்கர வாகனம் கிடைக்க, அரசு அதிகாரிகள் ஆவண செய்ய வேண்டும்’ என்றார்.

Related Stories: