தமிழகத்தில் பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 25 நபர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவு!!

சென்னை : தமிழகத்தில் பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த  25 நபர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி மு.பழனிசாமி அவர்களின் அறிக்கை

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், மணப்பாடு கிராமத்தைச் சேர்ந்த திரு. ரஞ்சித் என்பவரின் மகள் செல்வி ரேகா என்பவர் கடல் நீரில் குளிக்கும் போது, எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

    

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம், கண்டிச்சங்காடு கிராமத்தைச் சேர்ந்த திரு. ராமச்சந்திரன் என்பவரின் மகன் திரு. ரஞ்சித்குமார் என்பவர் சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

 திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், மீஞ்சூர், அரியன்வாயல் கிராமத்தைச் சேர்ந்த திரு. சுல்தான் பாஷா என்பவரின் மகன் செல்வன் நாகூர் மீரான் ஹூசைன் என்பவர் பேருந்து மோதியதில் உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

பூந்தமல்லி வட்டம், சென்னீர்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த திரு. சிவா என்பவர் மின்கம்பத்தில் பணியில் இருந்த போது, மின்கம்பம் உடைந்து, கீழே விழுந்ததில், பலத்த காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

இராணிப்பேட்டை மாவட்டம், வாலாசா வட்டம், கொண்டகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த திரு. பெருமாள் என்பவரின் மகன் திரு. ரவி என்பவர் விவசாய நிலத்தில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தார்  என்ற செய்தியையும்;

ஆற்காடு வட்டம், தாமரைப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த திரு. கிருஷ்ணன் என்பவரின் மகன் திரு. செல்வகுமார் மற்றும் திரு. கண்ணப்பன் என்பவரின் மகன் திரு. கிருஷ்ணகுமார் ஆகிய இருவரும் சாலை விபத்தில் உயிரிழந்தனர் என்ற செய்தியையும்;

ஈரோடு மாவட்டம், நம்பியூர் வட்டம், சின்னாரிபாளையம் கிராமத்தில் அமைந்துள்ள கல்குவாரியில் சத்தியமங்கலம் வட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரின் மகன் செல்வன் கதிரேசன் நீரில் மூழ்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த திரு. பெருமாள் என்பவரின் மக்கள் செல்வி புனிதவள்ளி, மகன் செல்வன் லோகேஸ்வரன் மற்றும் திரு. பழனிச்சாமி என்பவரின் மகன் செல்வன் இன்பத்தமிழன் ஆகிய மூன்று பேரும் சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டம்,  பூங்குடி கண்மாயில் குளிக்கும் போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி  உயிரிழந்தனர் என்ற செய்தியையும்;

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், கிராண்டிபுரம் கிராமத்தைச் சேர்ந்த திரு. முத்து என்பவரின் மகன் செல்வன் திவாகர் என்பவர் ஆத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள ஏரியில் எதிர்பாராத விதமாக மூழ்கி உயிரிழந்தார்  என்ற செய்தியையும்;

மரக்காணம் வட்டம், கூனிமேடு கிராமத்தைச் சேர்ந்த திரு. பிச்சாண்டி என்பவரின் மகன் செல்வன் பிரபு என்பவர் குளிக்கச் சென்ற போது, கடல் அலையில் சிக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம், அம்பலவாணன்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த திரு. அன்பழகன் என்பவரின் மகன் திரு. அருண்குமார் என்பவர் கடலில் குளிக்கும் போது, கடல் அலையில் சிக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், காட்டுச்செல்லூர் கிராமத்தைச் சேர்ந்த திரு. பாலகிருஷ்ணன் என்பவரின் மகன் திரு. சக்திவேல் என்பவர் என்பவர் விவசாய கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம், பொருந்தலூர் கிராமத்தைச் சேர்நத திரு. முனியாண்டி என்பவரின் மகன் திரு. சண்முகமூர்த்தி மற்றும் திரு. ஆறுமுகம் என்பவரின் மகன் திரு. கோபி ஆகிய இருவரும் குளத்திற்கு குளிக்கச் சென்ற போது, எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற  செய்தியையும்;

இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் வட்டம், கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த திருமதி ரமணி என்பவரின் கணவர் திரு. ஆசீர்வாதம் என்பவர் சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

சென்னை மாவட்டம், மயிலாப்பூர் வட்டம், தேனாம்பேட்டை பகுதியைச் சேர்ந்த திருமதி அஞ்சலை என்பவரின் மகன் திரு. வெங்கடேஷ் என்பவர் சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டம், குத்தியாலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த திரு. சடையப்பன் என்பவரின் மகன் திரு. ருத்ரன் மற்றும் திரு. ராமசாமி என்பவரின் மகன் திரு. பெரியசாமி ஆகிய இருவரும் சாலை விபத்தில் உயிரிழந்தனர் என்ற செய்தியையும்;

கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் வட்டம், கீழ்மிடாலம் கிராமத்தைச் சேர்ந்த திரு. செல்வம் என்பவரின் மகன் திரு. ஜெபின் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோயில் கிராமத்தைச் சேர்ந்த திரு.ஜீவா என்பவரின் மகன் செல்வன் பாலாஜி ஆகிய இருவரும் கன்னியாகுமரி மாவட்டம், குறும்பனை கடலில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியையும்;

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டம், பொய்கை கிராமத்தைச் சேர்ந்த திரு. கோவிந்தசாமி என்பவரின் மகன் செல்வன் தினேஷ் மற்றும் திரு. அசோகன் என்பவரின் மகன் செல்வன் அஜித்குமார் ஆகிய இருவரும் எதிர்பாராத விதமாக ஏரியில் தவறி விழுந்து உயிரிழந்தனர் என்ற செய்தியையும்  அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த  25 நபர்களின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.மேற்கண்ட பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 25 நபர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய்  முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: