மாநில அரசின் வரியை குறைக்கும் திட்டம் இல்லை: கே.சி.வீரமணி, வணிகவரித்துறை அமைச்சர்

பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்பது முழுக்க முழுக்க மத்திய அரசு எடுக்கும் முடிவு. இந்த விலை உயர்வுக்கும், எங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. இதேபோல், மாநில அரசின் வரியை குறைப்பதற்கான எந்த திட்டம் எதுவும் தற்போதைக்கு இல்லை. கொரோனா காலகட்டம் காரணமாக மாநில அரசுக்கு வரவேண்டிய வருவாய் வெகுவாக குறைந்து விட்டது. இதனால் பற்றாக்குளை உள்ள நிலையில், வரி குறைப்பை பற்றி யோசிக்க முடியாது. எனவே, பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டிய சூழல் இப்போதைக்கு இல்லை என்றுதான் கூற வேண்டியுள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்த விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்கு மாநில அரசு ஆலோசனை நடத்த வேண்டும் என பல தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் வருகின்றன. இருப்பினும் தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொள்ளும்போது, வரியை குறைப்பது தொடர்பான எந்த ஒரு ஆலோசனையையும் நடத்தும் நிலையில் அரசு இல்லை. இந்த விலை குறையுமா என்பதும் நமக்கு முழுமையாக தெரியாது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு மத்திய அரசுடன் தொடர்புடையது.

எனவே, இந்த விஷயத்தில் முழுக்க, முழுக்க மத்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டும். எனவே, இது பற்றி தற்போது எதுவும் கூறுவதற்கு இயலாது. சர்வதேச சந்தையில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு எப்படி இருக்கிறதோ, அதற்கு ஏற்பதான் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு விலையை நிர்ணயம் செய்கிறது. எனவே, இந்த விலை உயர்வை கட்டுப்படுத்துவது குறித்து நமது கையில் ஏதும் இல்லை. மாநில அரசை பொறுத்தவரையில் பெட்ரோல், டீசல் வரியை அதிகரிக்கும் நோக்கமோ, குறைக்கும் நோக்கமோ இல்லை. மத்திய அரசின் விலை நிர்ணயத்தை அப்படியே பின்பற்றுவது தான் மாநில அரசின் வேலை. இதில் மாநில அரசின் ஈடுபாடு எதுவுமே இல்லை. மாநில அரசின் வரி என்ன இருக்கிறதோ அது அப்படியே இருக்கும். மாற்றம் செய்வதற்கு வழியில்லை.

மாநில அரசுக்கான வரி 25, 35 அல்லது 38 என எது இருக்கிறதோ அது அப்படியே வரியாக கிடைக்கும். இந்த வரி தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கும். மத்திய அரசை பொறுத்தவரையில் 1 காசு, 5 காசோ, 10 காசோ என புதியதாக விலையை மாற்றி மாற்றி நிர்ணயம் செய்கிறது. இந்த விலை உயர்வில் மாநில அரசுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்த விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்கு மாநில அரசு ஆலோசனை நடத்த வேண்டும் என பல தரப்பில் இருந்தும் கோரிக்கைகள்  வருகின்றன. இருப்பினும் தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொள்ளும்போது, வரியை குறைப்பது தொடர்பான எந்த ஒரு ஆலோசனையையும் நடத்தும் நிலையில் அரசு இல்லை.

* 20 நாளில் 100 ரூபாய் வரை விலை உயரும் அபாயம்:  கே.சுரேஷ்குமார், தலைவர், சென்னை மண்டல இந்தியன் ஆயில் டீலர்ஸ் அசோசியேஷன்

கொரோனா பரவலுக்கு பிறகு இயல்பு நிலை இன்னும் முழுமையாக திரும்பவில்லை. இதுபோன்ற சூழலில் பெட்ரோல், டீசல் விலை தற்போது உயர்ந்து வருவது வாடிக்கையாளர்களுக்கு எந்த அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதோ அதைவிட இன்னும் அதிகமாக டீலர்ஸ்க்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 70 ரூபாய்க்கு பெட்ரோல் விற்றுகொண்டிருந்த போது என்ன வருவாய் வந்துகொண்டிருந்ததோ அதே நிலை தான் தற்போதும் எங்களுக்கு தொடர்கிறது. ஒரு லிட்டருக்கு இவ்வளவு சதவீதம் தான் என நிர்ணயம் செய்துள்ளார்கள். இதுபோக நிறைய புது பெட்ரோல் பங்குகள் வந்துள்ளது.

வீட்டிற்கே நேரடியாக சென்று வாடிக்கையாளர்களுக்கு பெட்ரோல் கொடுக்கும் திட்டத்தையும் அறிமுகம் செய்துள்ளார்கள். எங்களுடைய சதவிகிதம் கடந்த 3 வருடத்துக்கும் மேலாக உயர்த்தப்படவில்லை. எங்களின் நிலைமையும் மிகவும் கவலைக்கிடமான நிலையில் தான் உள்ளது. இதுகுறித்து அரசிடமும், எண்ணெய் நிறுவனங்களிடமும் பலமுறை முறையிட்டும் கூட இதுவரையில் தீர்வு காணப்படவில்லை. பெட்ரோல், டீசல் விலை உயர்வு வாடிக்கையாளர்களுக்கும் ஒரு பெரிய பாதிப்பு தான். இதேபோல், பட்ஜெட்டில் 5 முதல் 6 ரூபாய் வரையில் விலையை குறைப்பார்கள் என்று எதிர்பார்த்தோம்.

இப்போது கூட பெட்ரோலிய துறை அமைச்சர் விலையை குறைப்பது குறித்து எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. மேலும், எண்ணெய் நிறுவனங்கள் உள்ள நாடுகள் விலையை அதிகரிக்க மாட்டோம் என நமது அரசாங்கத்திற்கு உத்தரவாதம் கொடுத்திருந்தார்கள். ஆனால், அவர்கள் அந்த உத்தரவாதத்தை மீறி விலையை உயர்த்தியுள்ளார்கள். கடந்த வாரம் விலையை குறைப்பதற்கு ஒரு முடிவை எடுத்துள்ளார்கள். எனவே, கூடிய விரையில் விலை குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளது என அரசு தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், இது எப்போது நடக்கும் என்று தெரியவில்லை. பெட்ரோல், டீசலின் அடிப்படை விலை என்பது 30 ரூபாய் வரையில் தான் இருக்கிறது. ஆனால், நமக்கு 60 சதவீதம் வரியாக தான் உள்ளது. விலையை குறைக்க மத்திய, மாநில அரசுகள் முன்வருவதில்லை.

டெல்லியில் நடைபெறும் ஆலோசனை கூட்டங்களில் பலமுறை இதுகுறித்து நாங்கள் கேட்டுள்ளோம். ஆனால், மாநில அரசுகள் இதை ஒப்புக்கொள்ள மறுக்கிறது. வரி என்பது மாநில அரசுகளுக்கு மிகப்பெரிய வருமானமாக இருக்கிறது. ஜி.எஸ்.டியில் இதை கொண்டுவந்தால் அவர்களுக்கு வரவேண்டிய வருவாய் குறைந்துவிடும் என்பது மாநில அரசுகளின் கணிப்பாக உள்ளது. மத்திய, மாநில அரசுகள் கலந்தாலோசித்து பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டுவந்தால் கண்டிப்பாக விலை குறையும். முதலில் ஒவ்வொரு மாநில அரசுகளும் இதற்கு முழு ஒத்துழைப்பை கொடுக்க வேண்டும்.

மது மற்றும் பெட்ரோல், டீசல் வரி மூலம் வரும் வருவாய் தான் அரசுக்கு முழுமையாக வருகிறது. எனவே, ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும். தற்போது செல்லும் நிலையை பார்த்தால் 20 நாளில் 100 ரூபாய் வரை விலை உயர்வதற்கு வாய்ப்புள்ளது. விலை குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளது என அரசு தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், இது எப்போது நடக்கும் என்று தெரியவில்லை. பெட்ரோல், டீசலின் அடிப்படை விலை என்பது 30 ரூபாய் வரையில் தான் இருக்கிறது. ஆனால், நமக்கு 60 சதவீதம் வரியாக தான் உள்ளது. விலையை குறைக்க மத்திய, மாநில அரசுகள் முன்வருவதில்லை.

Related Stories: