கொச்சியில் ரூ.6,000 கோடியில் அமைக்கப்பட்டுள்ள பாலிபுரொப்பைலின் ஆலையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

திருவனந்தபுரம்: கொச்சியில் ரூ.6,000 கோடியில் அமைக்கப்பட்டுள்ள பாலிபுரொப்பைலின் ஆலையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்தியாவின் தற்சார்பு என்ற இலக்கை அடைய பாலிபுரொப்பைலின் ஆலை உதவியாக இருக்கும். பாலிபுரொப்பைலின் தயாரிப்பு தொழிற்சாலையால் மேலும் பல தொழில்கள் வளர்ச்சி அடையும், வேலை வாய்ப்பும் பெருகும். தேசிய அடிப்படைக் கட்டமைப்புத் திட்டத்தில் ரூ.110 கோடியை மத்திய அரசு முதலீடு செய்கிறது. அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்துவதில் கடலோர பகுதிகள், வடகிழக்கு மற்றும் மலைப்பகுதிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என கொச்சியில் பிபிசிஎல்-லின் சுத்திகரிப்பு ஆலையில் பாலிபுரொப்பைலின் ஆலையை தொடங்கி வைத்த பின் பேசினார்.

Related Stories: