பாஜகவிடம் ‘சோத்துக்கு என்ன வழி?’ எனக் கேட்கிறார்கள் வடமாநில இந்துக்கள் : திருமுருகன் காந்தி ட்வீட்

சென்னை : விவசாயிகள் போராட்டம் குறித்து ‘கிஷான் மகா பஞ்சாயத்து’ எனும் ஆலோசனைக்கூட்டம் உத்தரபிரதேசத்தில் நடந்து வருகிறது. நேற்றும் உத்திரப்பிரதேசத்தில் மொராதாபாத் மாவட்டம் பிலாரி சட்டமன்ற தொகுதியில் நடந்த கிஷான் மகா பஞ்சாயத்து கூட்டத்தில் விவசாயிகள் திரண்டனர். விவசாயிகள் போராட்டம் தொடரும் என்றும், விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு என்றும் அவர்கள் முழக்கம் எழுப்பினர்.இதனால் விவசாயிகள் போராட்டம் மீண்டும் பெரிய அளவில் வெடிக்கும் என்று தெரிகிறது.

இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள மே-17 இயக்கம் திருமுருகன்காந்தி, ‘’பாஜகவின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக திரண்டெழும் மக்கள். அயோத்தியில் இராமனுக்கு கோவில் கட்டினால் எல்லாவற்றையும் மறந்துவிடுவார்களென நினைத்த பாஜகவிடம் ‘சோத்துக்கு என்ன வழி?’ எனக் கேட்கிறார்கள் வடமாநில இந்துக்கள். இவர்களா இந்து மக்களின் காவலர்கள்?’’ என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார்.

இதனிடையே திருமுருகன் காந்தி வெளியிட்டுள்ள மற்றொரு ட்விட்டர் பதிவில்,தனியார் நிறுவனங்களை கொச்சைப்படுத்தாதீர்கள் என்கிறார் மோடி.அம்பானியும், அதானியும், டாடாவும், பிர்லாவும் இடஒதுக்கீடு உரிமையை நடைமுறைப்படுத்துவார்களா? கருப்பினத்தவருக்கும், கலப்பினத்தவருக்கும் சமவாய்ப்பளிக்கும் அமெரிக்க தனியார் நிறுவனமுறை போன்று ஏன் இங்கு நடைமுறைபடுத்தியதில்லை?, எனக் கேள்வி எழுப்பியுள்ளார். 

Related Stories: