மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வணிகர்கள் நலன் குறித்த கோரிக்கைகளை தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சேர்க்க விக்கிரமராஜா வலியுறுத்தல்.!!!

சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தலைமையில் வணிகர் சங்க பேரமைப்பு நிர்வாகிகள் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வணிகர்கள் நலன் குறித்த கோரிக்கைகளை தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இடம்பெற வலியுறுத்தினர்.இது தொடர்பாக வெளியான பத்திரிக்கை செய்தியில், கழகத் தலைவர் அவர்களை இன்று (11.2.2021), காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தலைமையில் வணிகர் சங்க பேரமைப்பு நிர்வாகிகள் நேரில் சந்தித்து வணிகர்கள் நலன் குறித்த கோரிக்கைகள் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இடம்பெற வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தனர்.

 இதனைபோல், அண்ணா பல்கலைக்கழகத்தில் உயிரி தொழில்நுட்ப எம்.டெக்., பட்ட மேற்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் 69 விழுக்காடு இடஒதுக்கீட்டுக்கு முட்டுக்கட்டை போடுவதை மத்திய பா.ஜ.க அரசு கைவிட வேண்டும் என்றும் - 69 சதவீத இடஒதுக்கீட்டின் அடிப்படையில் உயிரி தொழில்நுட்பவியல் துறையில் உள்ள மேற்கொண்ட இரு எம்.டெக்., பட்ட மேற்படிப்புகளுக்கும் மாணவர் சேர்க்கையை உடனடியாக நடத்திட வேண்டும்” என்றும் தங்களுக்காக மத்திய - மாநில அரசுகளை எதிர்த்து குரல் கொடுத்த கழகத் தலைவர் அவர்களுக்கு அண்ணா பல்கலைக் கழகத்தில் உயிரி தொழில்நுட்ப எம்.டெக்., மற்றும் பிஎச்.டி பயிலும் நாசர் மற்றும் கா.தீனா, பவித்ரா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் இன்று (11.2.2021), காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். உடன் கழக சட்டதிட்டத் திருத்தக்குழு இணைச் செயலாளர் வழக்கறிஞர் அ.சரவணன் உடனிருந்தார்.

Related Stories: