அமைதியை நிலைநாட்டுவதே இந்தியாவின் நோக்கம்; லடாக் எல்லை விவகாரத்தில் ஒரு ‘இன்ச்’ நிலத்தை கூட யாருக்கும் விட்டுக் கொடுக்கமாட்டோம்: ராஜ்நாத் சிங் திட்டவட்டம்

டெல்லி: லடாக் எல்லை விவகாரத்தில் ஒரு ‘இன்ச்’ நிலத்தை கூட யாருக்கும் விட்டுக் கொடுக்கமாட்டோம் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். லடாக் எல்லை நிலவரம் தொடர்பாக மாநிலங்களவையில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்து பேசிய அவர்; அநியாயமான நிலைப்பாட்டை இந்தியா ஏற்றுக்கொள்ளவில்லை. 1962 போருக்குப்பின் இந்தியாவின் 38,000 சதுர கி.மீ. பரப்பை சீனா ஆக்கிரமித்து கொண்டது. லடாக்கில் உள்ள 5,180 சதுர கி.மீ. இந்திய நிலத்தை சட்ட விரோதமாக சீனாவுக்கு பாகிஸ்தான் அளித்துள்ளது.

2020-ம் ஆண்டு செப்டம்பர் முதல் சீன அரசுடன் இந்தியா சார்பில் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றன. சீனா ராணுவத்தின் அத்துமீறிய நடவடிக்கையால் லடாக் பிராந்தியத்தில் அமைதி பாதிக்கப்பட்டது. அனைத்து நிலைகளிலும் சீன ராணுவத்தைவிட ஒருபடி மேலே தான் இந்திய ராணுவம் இருந்தது. சீனாவுடன் ராணுவ ரீதியாகவும், ராஜாங்க ரீதியாகவும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. எல்லையில் பதற்றத்தைத் தணிக்க பாங்காங் ஏரி அருகே படைகளை விலக்க முடிவு எனவும் விளக்கம் அளித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர்; வடக்கு மற்றும் தெற்கு கரை பகுதிகளில் இருந்து ஏற்கனவே படை விலக்கம் தொடங்கிவிட்டது.

படைகளை குவித்து அச்சுறுத்திய சீனாவை தைரியத்துடன் சமாளித்து இந்திய வீரர்கள் பதிலடி தந்தனர். பாங்காங் சோ ஏரி பகுதியில் தங்களது வீரத்தை வெளிப்படுத்திய வீரர்களுக்கு நாடே கடமைப்பட்டுள்ளது. லடாக் எல்லையில் எத்தகைய சோதனை ஏற்பட்டாலும் அதை சந்திக்க தயார். லடாக் எல்லை விவகாரத்தில் ஒரு ‘இன்ச்’ நிலத்தை கூட யாருக்கும் விட்டுக் கொடுக்கமாட்டோம். லடாக் பகுதியில் அமைதியை நிலைநாட்டுவதே இந்தியாவின் நோக்கம் எனவும் திட்டவட்டமாக தெரிவித்தார்.

Related Stories: