மேற்கு வங்கத்தில் பாஜக திட்டம் பலிக்காது: கலவரத்தை விரும்பினால், பாஜகவுக்கு வாக்களியுங்கள்... மம்தா பானர்ஜி தாக்கு.!!!

மால்டா: மேற்கு வங்கத்தை சீர்குலைக்க பாஜக நினைப்பது ஒரு போதும் நடக்காது என்று அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்கு வங்க  மாநிலத்தில் வருகின்ற ஏப்ரல், மே மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற  உள்ளது. மாநிலத்தில் ஆட்சியை தக்க வைக்க மாநில முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த முறை மேற்கு வங்கத்தில் எப்படியாவது ஆட்சியை பிடிக்க   வேண்டும் என்று பாஜகவும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனது.

இதற்கு ஏற்ப, ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து அதிருப்தி எம்எல்ஏக்கள், முக்கிய தலைவர்கள் பலர் வெளியேறி வருகின்றனர். இவர்களில்  பெரும்பாலானோர் பாஜவில் இணைந்து வருவது குறிப்பிடத்தக்கது. தற்போதுவரை  திரிணாமுல் கட்சியிலிருந்து விலகி அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள் என 19 முக்கிய பிரமுகர்கள் பாஜகவில் இணைந்துள்ளனர். இருப்பினும், தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள மம்தா பானர்ஜி, பாஜகவை  கடுமையாக தாக்கி வருகிறார். இதற்கு ஏற்ப, பாஜகவினரும் மம்தா பானர்ஜி ஆட்சியை குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், மேற்கு வங்க மாநிலம் மால்டாவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மாநில முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி  தலைவருமான மம்தா பானர்ஜி, பாஜகவை ஆட்சிக்கு கொண்டுவருவது என்பது கலவரங்களை  ஊக்குவிப்பதாகும். நீங்கள் கலவரத்தை விரும்பினால், பாஜகவுக்கு வாக்களியுங்கள். மம்தா தனியாக இல்லாததால் அவரை தோற்கடிக்க முடியாது, அவருக்கு மக்களின் ஆதரவு உள்ளது. மேற்கு வங்கத்தை சீர்குலைக்க பாஜக நினைப்பது ஒரு  போதும் நடக்காது.

நான் உயிருடன் இருக்கும் வரை, மேற்கு வங்கத்தில் பாஜகவை அனுமதிக்க மாட்டேன்.  நாட்டை பாஜக சீர்குலைத்து வருவதாகவும் மம்தா பானர்ஜி குற்றம் சாடினார். சில நாட்களுக்கு முன் கொல்கத்தாவில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மம்தா  பானர்ஜி, டி.எம்.சிக்கு மாற்றானது டி.எம்.சி மட்டுமே. வேறு யாரும் இல்லை. அவர்கள் (பிஜேபி) கலவரங்களை விரும்புகிறார்கள், எங்களுக்கு அமைதி வேண்டும் என்றார்.

Related Stories: