யாரை நம்புவது?: பிரபல மருத்துவர் பெயரில் போலி ஆவணம் தயாரித்து ஆந்திரா, தெலுங்கானாவில் சிகிச்சை அளித்த போலி மருத்துவர் கைது..!!

ஹைதராபாத்: பிரபல மருத்துவர் பெயரில் போலி ஆவணங்கள் தயார் செய்து ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் சிகிச்சை அளித்து வந்த போலி மருத்துவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஐதராபாத்தை சேர்ந்தவர் சிறுநீரக பிரிவு சிறப்பு மருத்துவர் முப்பு கிரண்குமார். இவர் தனது பெயரில் சிலர் போலியாக சிகிச்சை அளித்து வருவதாக காவல் துறையிடம் புகார் அளித்திருந்தார். அவரது புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணையை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கோதாவரி மாவட்டம் அல்லவரத்தை சேர்ந்த கிரண்குமார் என்பவர் போலியாக மருத்துவ சான்றிதழ்களை தயாரித்து மருத்துவம் பார்த்து வந்தது தெரியவந்தது.

அவரிடம் கிடுக்குபிடி விசாரணை நடத்திய போலீசார் போலி மருத்துவர் மங்கம் கிரண் குமாரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட போலி மருத்துவரிடம் இருந்து போலி மருத்துவ சான்றிதழ்களும் பறிமுதல் செய்யப்பட்டன. அவரிடம் ஸ்ரீகார்குளம் போலீசார் விசாரணையை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து அங்குள்ள போலீசார் தெரிவித்ததாவது, ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் முப்பு கிரண்குமார் தனது பெயர் மற்றும் சான்றிதழை போலியாக தயார் செய்து யாரே ஏமாற்றுவதாக புகார் அளித்திருந்தார்.

அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டதில் மங்கம் கிரண்குமார் என்பவன், மருத்துவர் முப்பு கிரண்குமாரின் மருத்துவ சான்றிதழ் மற்றும் பெயரை அவதூராக பயன்படுத்தி போலி சான்றிதழ் தயார் செய்தது தெரியவந்தது. சீகாகுளம் மாவட்டம் ராஜம், அமலாபுரம், பீமாவரம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்து வந்துள்ளார். அவனிடம் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது என குறிப்பிட்டார்.

Related Stories: