அரசுக்கு விக்கிரமராஜா வலியுறுத்தல் வணிகர்களுக்கு நிதி ஆதாரத்தை உடனடியாக அளிக்க வேண்டும்

சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக வணிகர்களின் நெடுநாள் கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப்படாமல் இருப்பது வருத்தம் அளிப்பதாக இருக்கின்றது. கொரோனா பேரிடர் காலத்தில் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து, பொருளாதார ரீதியில் பெரும் பின்னடைவை சந்தித்து கொண்டிருக்கின்ற வணிகர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் எவ்வித கருணையும் காட்டவில்லை.  நிலுவையில் உள்ள வங்கிக் கடன் மீதான வட்டி விகிதங்கள் சில நூறு கோடி ரூபாய் தான் வரும்.  கொரோனா பேரிடர் கால வரி மற்றும் வாடகை தள்ளுபடிக்கான வழிமுறைகளை தமிழக அரசு ஆராய்ந்து உடனடியாக நடவடிக்கை எடுத்திட வேண்டும். பெருந்தொற்றால் உயிரிழந்த வணிகர்களின் குடும்பங்களுக்கு தலா ₹10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்ற நிலுவையில் உள்ள கோரிக்கையும் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.  விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டதை போன்று வணிகர்களுக்கும் நிதி ஆதாரங்களை மேம்படுத்திட உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு விரைந்து எடுத்திட வேண்டும்.

Related Stories: