விசுவாசத்தில் நிகழ்கால பரதன் ஓபிஎஸ் என விளம்பரம்: சசிகலா தமிழகம் திரும்பும் நிலையில் விசுவாசம் பற்றி விளம்பரம் ஏன்?.. சசிகலாவுக்கு எடப்பாடி பரதனாக இருக்க கூறுகிறாரா என விமர்சனம்

சென்னை: சசிகலா தமிழகம் திரும்பும் நிலையில் விசுவாசத்தில் நிகழ்கால பரதன் ஓ.பன்னீ ர்செல்வம் என்று வெளியாகியுள்ள பத்திரிக்கை விளம்பரம் அரசியல் அரங்கில் பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. இன்று வெளியாகி உள்ள நாளேடு ஒன்றில் விசுவாசத்தில் நிகழ்கால பரதன் என்ற தலைப்பில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீ ர்செல்வத்தின் விசுவாசம் பற்றி முழு பக்க விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் 2001, 2014-ம் ஆண்டுகளில் முதலமைச்சராக பதவியேற்ற ஓபிஎஸ் மீண்டும் அந்த பதவியை ஜெயலலிதாவிடம் ஒப்படைத்தது நினைவு கூறப்பட்டுள்ளது.

அதேபோல் 2016-ல் 3-ம் முறையாக முதலமைச்சராக இருந்த போது மக்களின் ஆதரவு இருந்த போது கட்சி தலைமை நிர்வாகிகள் வேண்டுகோளுக்கு இணங்க பதவியை ஓபிஎஸ் விட்டுக்கொடுத்ததாக விளம்பரத்தில் கூறப்பட்டுள்ளது. ராமர் வனவாசம் சென்ற போது பரதனிடம் ஒப்படைக்கப்பட்ட ஆட்சி அதிகாரத்தை மீண்டும் ராமரிடமே ஒப்படைத்ததை சுட்டிக்காட்டி ஓ.பன்னீர்செல்வத்தை ஜெயலலிதா புகழ்ந்ததாக பத்திரிக்கை விளம்பரம் வர்ணிக்கிறது. சசிகலா நாளை சென்னை திரும்ப உள்ள நிலையில் ஓபிஎஸ்-ஐ புகழ்ந்து வெளியாகியுள்ள இந்த விளம்பரம் பல்வேறு யுகங்களை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைத்தளங்களிலும் இது தொடர்பாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. தான் அமர முடியாமல் போன முதலமைச்சர் பதவியில் எடப்பாடி பழனிசாமியை உட்கார வைத்தார் சசிகலா. அதனை சசிகலாவிடமே இடப்படின் பழனிச்சாமி கொடுக்க வேண்டும் என்பதையே பரதன் விளம்பரத்தின் மூலம் ஓபிஎஸ் உணர்த்துகிறாரோ என்றும் கருத்துக்கள் பகிரப்படுகின்றன. விசுவாசத்தில் நிகழ்கால பரதன் விளம்பரம் தவிர மற்றோரு பத்திரிக்கையில் நிதியமைச்சராக ஓபிஎஸ் பல்வேறு சாதனைகள் புரிந்ததாக 2 பக்க விளம்பரமும் தரப்பட்டுள்ளது.

அதில் ஒரு மாநிலத்தின் பட்ஜெட்டை தொடர்ந்து 10 ஆண்டுகள் தாக்கல் செய்த ஒரே நிதியமைச்சர் என்றும் ஆட்சிக்கு மட்டுமல்ல அதிமுகவின் பொருளாதார நிர்வாகத்தையும் ஓ.பன்னீர்செல்வத்திடம் வழங்கினார் ஜெயலலிதா என்பது உள்ளிட்ட புகழாரங்களும் சுடப்பட்டுள்ளன. ஓபிஎஸ், இபிஎஸ் இடையே கட்சியிலும், ஆட்சியிலும் பதவி சண்டை நீடிப்பதை இந்த விளம்பரங்கள் காட்டுவதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

Related Stories: