கடையம் அருகே கிடப்பில் போடப்பட்ட ராமநதி-ஜம்புநதி மேல்மட்ட கால்வாய் பணியை விரைவில் துவங்க வேண்டும்: பூங்கோதை எம்எல்ஏ வலியுறுத்தல்

கடையம்: கடையம் அருகே கிடப்பில் போடப்பட்ட  ராமநதி-ஜம்புநதி மேல்மட்ட கால்வாய் பணியை தொடங்க வேண்டுமென பூங்கோதை எம்எல்ஏ தமிழக அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளார். கடையத்தில் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் 84அடி கொள்ளளவு கொண்ட ராமநதி அணையின் மூலம் கடையம் பகுதியில் உள்ள 5 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. பாவூர்சத்திரம், திப்பணம்பட்டி, கல்லூரணி, சிவநாடானூர், நாட்டார்பட்டி, ஆவுடையானூர், அரியப்புரம், செந்நெல்தாபுதுக்குளம், பூவனூர், சிவநாடானூர், மைலப்புரம், வெங்கடாம்பட்டி, சின்னநாடானூர், தெற்கு மடத்தூர், வெய்க்காலிபட்டி, கரிசலூர் உட்பட  100க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் விவசாய பணிகளை மேற்கொள்வதற்கு ராமநதி-ஜம்பு நதி மேல்மட்ட கால்வாய் அமைக்கும் பணிக்கு ரூ.41.50 கோடி அரசு ஒதுக்கீடு செய்தது.

இதனையடுத்து கடந்த நவம்பர் மாதம் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டு ஜேசிபி மற்றும் ராட்சத இயந்திரங்களுடன்  கால்வாய் வெட்டும் பணி தொடங்கியது. இதனையடுத்து களக்காடு முண்டந்துறை புலிகன் காப்பகத்தின் அம்பை கோட்ட துணை இயக்குநர் திலீப்குமார் பணியை பார்வையிட்டார். இதில் இந்திய வனஅமைச்சகம், தேசிய புலிகள் காப்பகம் ஆகிய இடத்தில் அனுமதி பெறவில்லை எனவும், அனுமதி பெற்று பணியை தொடரவும் உத்தரவிட்டார்.தகவலறிந்த ஆலங்குளம் எம்எல்ஏ பூங்கோதை கடவக்காடு பகுதியில் தொடங்கப்பட்ட கால்வாய் வெட்டும் பணியை பார்வையிட்டார்.

பின்னர் அவர் கூறுகையில், தொடங்கிய வேகத்தில் கிடப்பில் போடப்பட்ட ராமநதி- ஜம்புநதி மேல்மட்ட கால்வாய் பணி மக்களின் நீண்டநாள் கனவாகும். ஒவ்வொரு முறையும் நிதி ஒதுக்கி அந்த நிதி வீணாகுவது மக்களின் வரிப்பணத்தை வீணாக்குவதாகும். எனவே முறையான அனுமதி பெற்று கால்வாய் பணியை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

Related Stories: