சூடுபிடிக்கும் தமிழக அரசியல் களம்: இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா வரும் 10-ம் தேதி தமிழகம் வருகை.!!!

புதுடெல்லி: அடுத்த ஓரிரு மாதத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதுகுறித்த ஆய்வுகளை மேற்கொள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா வரும் 10-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க இன்னும் ஒருசில மாதங்களே உள்ளதால் அனைத்து கட்சிகளின் தேர்தல் பிரசாரமும் சூடு பிடித்துள்ளது.

இதற்கிடையே, மாநிலத்தில் தேர்தல் நடத்த இருக்கும் நிலவரம் குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் கடந்த 2020 டிசம்பர் மாதம் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் தமிழகம் வந்து தீவிர ஆய்வுகளை மேற்கொண்டனர்.

இதனை தொடர்ந்து, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மற்றும் தேர்தல் ஆணையர்கள் சுஷில் சந்திரா, ராஜீவ் குமார் மற்றும் உயர் அதிகாரிகள் இந்த மாதம் தமிழகம் வரவுள்ளதாக தகவல் வெளியாகியது.

இந்நிலையில், தமிழக சட்டப்பேரவை தேர்தல் குறித்து ஆய்வு மேற்கொள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மற்றும் 8 பேர் கொண்ட குழுவினர் வரும் 10-ம் தேதி 3 நாள் பயணமாக தமிழகத்திற்கு வருகை வரவுள்ளனர்.

வரும் 10 ம் தேதி காலை 08.15 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்பட்டு 11 மணியளவில் சென்னைக்கு வருகின்றனர். தொடர்ந்து, மதியம் 12.15 மணியளவில் தமிழக அரசியல் கட்சிகளுடன் சுனில் அரோரா உள்ளிட்ட தேர்தல் அதிகாரிகள்

ஆலோசனை நடத்தவுள்ளனர். தொடர்ந்து, மாலையில் தமிழக தேர்தல் அதிகாரி மற்றும் அலுவலர்கள் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்துகின்றனர்.

இந்த வருகையின்போது, தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலை எப்படி நடத்துவது, அரசியல் கட்சிகளின் நிலைபாடு என்னவாக உள்ளது. மொத்த வாக்குப்பெட்டியின் தேவைகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆகியவை குறித்து மாநில தேர்தல் அதிகாரியோடு ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.

இதனையடுத்து, 11-ம் தேதி காலையில் தமிழக தலைமை செயலாளர் மற்றும் உள்துறை செயலாளர் ஆகியோருடன் ஆலேசாசனை நடத்துகின்றனர். தொடர்ந்து தேர்தல் ஆணையர் சுனில் அரோரா உள்ளிட்ட அதிகாரிகள் செய்தியாளர்களை சந்திக்கின்றனர். தொடர்ச்சியாக, புதுச்சேரி செல்லும் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் குழுவினர் புதுச்சேரி தலைமை செயலாளர் உள்துறை செயலாளர் மற்றும் அரசியல் கட்சியினருடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர். பின்னர் 12-ம் தேதி செய்தியாளர்களை சந்திப்பு நடைபெற உள்ளது. இந்த ஆலோசனையின் முடிவுக்கு பிறகு அடுத்த ஓரிரு வாரங்களில் தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதி அட்டவணை அதிகாரப்பூர்வமாக வெளியாக வாய்ப்பு உள்ளது.

Related Stories: