இன்று மாலை முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்திக்கிறார் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்

சென்னை: இன்று மாலை 4 மணிக்கு முதல்வர் எடப்பாடி  பழனிசாமியை அவரது இல்லத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் சந்திக்கிறார். வன்னியர்களுக்கான 20 சதவிகித உள்ஒதுக்கீடு, கூட்டணி தொடர்பாக முதலமைச்சருடன் ராமதாஸ் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பா.ம.க. நிர்வாகிகளுடன் கடந்த சில தினங்களாக அமைச்சர்கள் குழு ஆலோசனை நடத்தி வந்த நிலையில் இன்று ராமதாஸ் முதல்வரை சந்திக்கிறார்.

வன்னியர்களுக்கான 20 சதவிகித இடஒதுக்கீடு தொடர்பாக பா.ம.க.வினுடைய தலைவர் ஜி.கே.மணி தலைமையிலான குழு தொடர்ச்சியாக அமைச்சர்களுவுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறர்கள். 3 கட்ட பேச்சுவார்த்தையானது நடைபெறும் முடிவு சுமுகமாக எட்டப்படாத காரணத்தால் தொடர்ந்து இழிபறியானது நீடித்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தான் பேச்சுவார்ததையில் ஒரு உடன்பாடு எட்ட படாததால் பாமகவினுடைய நிறுவனர் ராமதாஸ் முதல்வரை சந்திக்கவிருக்கிறார்.

இந்த சந்திப்பில் வன்னியர்களுக்கான 20 சதவிகித இடஒதுக்கீடு மற்றும்  அதிமுக-பாமக கூட்டணியை உறுதி செய்யும் விதமாகவும் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை நடைபெற்ற 3 கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்ததை தொடர்ந்து இன்று 4-ம் கட்ட பேச்சுவார்த்தியானது நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்தான் இன்று மாலை 4 மணிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் நேரடியாக சந்தித்து  வன்னியர்களுக்க்கு 20 சதவிகித இடஒதுக்கீடு தொடர்பான ஒரு இறுதி முடிவு எட்டுவதற்கு அடுத்த கட்டமாக அதிமுக-பாமக கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை தொடங்குவதற்கு ஏதுவாக இந்த சந்திப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: