'தேர்தல் தேதி அறிவிப்பிற்கு முந்தைய பிரசார செலவுகள் கணக்கில் வராது': தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு..!!

சென்னை: தேர்தல் தேதி அறிவிப்பிற்கு முன்பு நடக்கும் பிரச்சாரங்களின் செலவுகளை தேர்தல் ஆணையம் கணக்கில் எடுத்துக்கொள்ளாது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் சத்யபிரத சாகு, தமிழக சட்டமன்ற தேர்தல் தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்றார்.

தமிழகத்தில் 4.5 லட்சம் மாற்றத்திறனாளி வாக்காளர்கள் உள்ளதாகவும் பூத் வரை அவர்களது வாகனத்தில் சென்று வாக்களிக்கலாம் என்றும் கூறினார். தொடர்ந்து, இணையவழி பணப்பட்டுவாடாவை தடுக்க ரிசர்வ் வங்கி ஒன்றும் சம்பந்தப்பட்ட வங்கிகள் கண்காணிப்பில் ஈடுபடும் என்றும் மேலும் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பு நடைபெறும் பிரச்சாரங்களில் செலவுகளை தேர்தல் ஆணையம் கணக்கில் எடுத்துகொள்ளாது என்றும் சத்யபிரத சாகுதெரிவித்தார்.

இது தொடர்பான புகார்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்று தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை அனுப்பப்படும் என்றும் அவர் கூறினார். அரசு பணம் 1000 கோடி ரூபாயை முதலமைச்சர் பழனிசாமி, தன் விளம்பரத்திற்காகவும், கட்சி விளம்பரத்திற்காகவும் செலவிட்டுள்ளார் என்று திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் அண்மையில் புகார் மனு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: