நாக்பூர் அரசு மருத்துவமனையில் உலா வரும் நாய்கள்: பாதுகாவலர்களை மீறி நாய்கள் நுழைந்தது எப்படி?.. என விசாரணை

நாக்பூர்: மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் அரசு மருத்துவமனையில் 2 நாய்கள் நோயாளிகள் இருக்கும் வளாகத்தில் அச்சமின்றி உலா வந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. நாக்பூரில் யவத்மால் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 5 வயதுக்கு உட்பட்ட 12 குழந்தைகளுக்கு சொட்டு மருந்துக்கு பதிலாக கிருமி நாசினி வழங்கப்பட்டது. அவர்களில் ஒரு கிழந்தைக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் குழந்தைகள் யவத்மால் அரசு மருத்துவக்கல்லுரி மருத்துவமனைக்கு சேர்க்கப்பட்டனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் யவத்மால் அரசு மருத்துவக்கல்லுரி மருத்துவமனையில் நோயாளிகள் இருந்த வார்டுகளுக்குள் 2 நாய்கள் இரவு நேரத்தில் நுழைந்து உலா வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவமனைக்குள் நாய்கள் உலா வரும் காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. மருத்துவமனைக்கு வெளியே பாதுகாவலர்கள் இருந்தும் நாய்கள் நோயாளிகள் இருக்கும் இடம் வரை வந்தது எப்படி மருத்துவமனை நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது. சொட்டு மருந்துக்கு பதிலாக கிருமி நாசினி வழங்கிய அலட்சியம் மகாராஷ்டிராவில் அரங்கேறிய நிலையில் மருத்துவமனையில் நாய்கள் நடமாட்டம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: