காளான் க்ரீமி சூப்

எப்படிச் செய்வது?

Advertising
Advertising

நான்ஸ்டிக் தவாவில் வெண்ணெய் சேர்த்து உருகியதும் வெங்காயம், பூண்டு, கிராம்பைச் சேர்த்து வதக்கி நீளமாக நறுக்கிய காளானைச் சேர்த்து வதக்கவும். காளானில் உள்ள தண்ணீர் வற்றி பொன்னிறமாக மாறும் வரை வதக்கி கோதுமை மாவை சேர்த்து நன்றாக பிரட்டி, சிறிது தண்ணீர் சேர்த்து லேசாகக் கொதிக்க விடவும். அதனுடன் பால், மிளகு, உப்பு சேர்த்து மிதமான தீயில் சூப்பை லேசாக கொதிக்க விடவும். பால் கொதித்து கெட்டியானதும் இறக்கவும். சூடு ஆறியதும் ஃப்ரெஷ் கிரீம் கலந்து மல்லித்தழை தூவி பரிமாறவும்.

குறிப்பு: கோதுமை மாவிற்கு பதில் கார்ன்ஃப்ளார் சேர்க்கலாம்.