அரசலூர் ஏரி உடைந்தது போல் ஆபத்து விசுவக்குடி ஏரி விரிசலை உடனே சீரமைக்க வேண்டும்: சமூக ஆர்வலர் வேண்டுகோள்

பெரம்பலூர்: அரசலூர் ஏரி உடைந்தது போல் உடையும் அபாயத்தில் விசுவக்குடி ஏரி. விரிசலை விரைந்து சீரமைக்க வேண்டும் என்று பெரம்பலூர்  கலெக்டரிடம் விசுவக்குடி சமூக ஆர்வலர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.பெரம்பலூர் மாவட்டம் வேப் பந்தட்டை தாலுகா, அன்னமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்டது விசுவக்குடி கிராமம். இவ்வூர் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த  சமூக ஆர்வலரான முகமது ஜக்க ரியா என்பவர் நேற்று பெரம்பலூர் கலெக்டரிடம் அளித்த கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது :

விசுவக்குடி ஊராட்சி பகுதியில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் அருகே ஏரி ஒன்று உள்ளது. தற்போது பெய்த மழையின் காரணமாக இந்த ஏரி  நிரம்பி உள்ளது.

இந்த ஏரியை சுற்றியுள்ள விளை நிலங்களுக்கும் கிணறுகளுக்கும் நீராதரமாக இந்த ஏரியாக உள்ளது. தற்போது இந்த ஏரியின் உபரி  நீர் வெளியேற்றப்படும் கடகால் எனப்படும் கான்கிரீட் கட்டுமானத்தில் மிகப்பெரிய விரிசல் காணப்படுகிறது. ஒன்றரை மீட்டர் நீளமுள்ள இந்த விரிசல்  அதன் கட்டுமானத்திற்கு ஆபத்தை ஏற்படுத் தும் விதமாகவே உள்ளது.இதன் காரணமாக அரசலூர் ஏரி உடைந்து 170 ஏக்கர் விலை நிலங்கள் நாசமானது போல இப்பகுதியிலும் அசம்பாவிதம் ஏதும் நேராமல், முன்கூட்டியே  திட் டமிட்டு மக்களையும் விளை நிலங்களையும் காப்பாற்றத் துரித நடவடிக்கை எடுத்து பொதுப்பணித்துறை மூலம் விரிசலை சரி செய்து, ஏரி நீரை  பாதுகாக்க விரைந்து உத்தரவு இட வேண்டும் என விசுவக்குடி கிராம பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.இவ்வாறு அதில் கூறுப்பட்டுள்ளது.

Related Stories: