கடற்கரையில் நினைவிடம், வேதா நிலையத்தை திறந்து தேர்தல் நேரத்தில் மக்களை திசைதிருப்புகிறதா அரசு: என்னவிதமான தர்மயுத்தம் இது

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்து நான்காண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அவரது மரணத்தின் பின்னணியில் உள்ள மர்மம் இன்னமும் விலகவில்லை. சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிவிட்டதால். ஜெயலலிதா மீது ஆட்சியாளர்கள் திடீரென அதிக அக்கறை காட்டத் தொடங்கிவிட்டனர். மெரினா கடற்கரையில் ஜெயலலிதா நினைவிடம், அவர் வாழ்ந்த வேதா இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்பட்டு திறக்கப்பட்டுள்ளன. ஜெயலலிதா மரண மர்மத்தை கண்டுபிடிக்க அமைக்கப்பட்ட நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம், விசாரணை நடத்திக்கொண்டே இருக்கிறது. விசாரணை கமிஷன் தொடங்கப்பட்ட போது, 3 மாதங்களுக்குள் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.

ஆனால், கிட்டத்தட்ட 40 மாதங்கள் உருண்டோடிவிட்ட நிலையில், இதுவரை 10வது முறை ஆணையத்தின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டபோதும், இன்றுவரை எந்த அறிக்கையையும் அரசுக்கு சமர்ப்பிக்கவில்லை. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு முதல்வராக பதவியேற்ற, ஓ.பி.எஸ் தனது பதவி பறிபோகும்போது மெரினாவில் ஜெயலலிதா சமாதியில் தர்மயுத்தம் நடத்தினார். ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பது தான் அவர் எழுப்பிய முதல் சந்தேகம். பின்னர், எடப்பாடியுடன் இணைந்து துணை முதல்வர் பதவி பெற்ற ஓ.பி.எஸ்சுக்கு ஆறுமுகசாமி ஆணையம் இதுவரை 9 சம்மன்களை அனுப்பியுள்ளது.

ஆனால், ஓ.பி.எஸ். ஒருமுறை கூட ஆஜராகவில்லை. ஆணையத்திடம் ஆஜராகி அவருக்கு தெரிந்த சந்தேகங்களை தெரிவித்திருக்கலாமே? நினைவிடம், நினைவு இல்லம், ஆணையம் என்று பலகோடி ரூபாய் மக்கள் வரிப்பணம் வீணாகிக் கொண்டிருக்கிறது. ஜெயலலிதா மரணத்தின் மர்மத்தை கண்டுபிடிக்காமல், அடுத்தடுத்து திறப்பு விழாக்களை நடத்தி தேர்தல் நேரத்தில் மக்களை திசை திருப்ப தமிழக அரசு முயற்சிக்கிறதா, இது எந்த வகையான தர்மயுத்தம், யாரை ஏமாற்ற இந்த கபட நாடகம் என்று அடுக்கடுக்கான கேள்விகள் எழுந்துள்ளது. இது பற்றிய நான்கு கோண அலசல் இங்கே:

Related Stories: