அதிமுக கொடி கட்டிய காரில் புறப்பட்டார் சசிகலா: மருத்துவமனை வாயிலில் ஏராளமான தொண்டர்கள் திரண்டு நின்று வரவேற்பு

பெங்களூரு: பெங்களுருவில் உள்ள விக்டோரியா அரசு மருத்துவமனையில் இருந்து சசிகலா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். கொரோனாவில் இருந்து முழுமையாக குணம் அடைந்ததை அடுத்து வீடு திரும்புகிறார். சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலா, கடந்த 27ம் தேதி விடுதலை செய்யப்பட்டார். சிறையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், பெங்களூருவில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு கொரோனா பாதிப்பு முற்றிலும் குணமாகி விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அவர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று மருத்துவமனை நிர்வாகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது. அந்த வகையில் பெங்களுருவில் உள்ள விக்டோரியா அரசு மருத்துவமனையில் இருந்து சசிகலா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சசிகலா அதிமுக கொடி கட்டிய காரில் புறப்பட்டார். மருத்துவமனை வாயிலில் ஏராளமான தொண்டர்கள் திரண்டு நின்று சசிகலாவை வரவேற்றனர்.

பெங்களுருவில் ஓய்வெடுக்கும் சசிகலா, வரும் பிப்ரவரி 3 அல்லது 5 ஆம்தேதி தமிழகம் திரும்புவார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. து குறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் ஜெயக்குமார் அதிமுக அடிப்படை உறுப்பினராக இல்லாத சசிகலா எப்படி கட்சிக் கொடியை பயன்படுத்த முடியும், இது சட்டத்திற்குப்  புறம்பானது என கூறியுள்ளார்.

Related Stories: