தை மாதத்தை முன்னிட்டு இருங்குன்றப்பள்ளி பாலமுருகன் கோயிலில் 1008 பால்குட ஊர்வலம்: ஏராளமான பக்தர்கள் தரிசனம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே, சுமார் 500 ஆண்டுகள் பழமைவாய்ந்த முருகன் கோயிலில், தை மாதத்தை முன்னிட்டு,  ஏராளமான பக்தர்கள் பால்குடம் மற்றும் காவடி ஏந்திவாறு ஊர்வலமாக வந்து தரிசனம் செய்தனர்.

செங்கல்பட்டு அடுத்த ஆலப்பாக்கம் ஊராட்சி இருங்குன்றப்பள்ளி மலைஉச்சியில் சுமார் 500 ஆண்டுகள் பழமைவாய்ந்த பாலமுருகன் கோயில் உள்ளது. இந்த கோயிலில், ஆண்டுதோறும் தை மாதத்தில், ஏராளமான பக்தர்கள் தங்களுடைய வேண்டுதல் நிறைவேற்றுவதற்காக, பாலகுடம் எடுப்பது வழக்கம். இந்நிலையில், இருங்குன்ற பாலாற்றங்கரையில் இருந்து, நேற்று காலை பெண்கள் மற்றும் ஆண்கள் ஏராளமானோர் கங்கை திரட்டி, 1008 பால்குடம் எடுத்தும், காவடி ஏந்தியும் ஊர்வலமாக இருங்குன்றப்பள்ளிக்கு பாலமுருகன் கோயிலுக்கு சென்றனர்.

அங்கு, பாலமுருகனுக்கு  சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்து வழிபட்டனர். இதில் ஆலப்பாக்கம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கே.சல்குரு, முன்னாள் துணை தலைவர் உமாபதி, ஆலய நிர்வாகி குமார் உள்பட இருங்குன்றப்பள்ளி, வேம்பாக்கம், ஆலப்பாக்கம் பகுதிகளை சேர்ந்த பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: