நிர்வாக ஆணையர் பதவி துறந்தார் அச்சுதானந்தன்

திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் முன்னாள் முதல்வர் அச்சுதானந்தனை முன்னிறுத்தி இடது முன்னணி பிரசாரம் செய்தது. வெற்றி பெற்றால் அச்சுதானந்தன் மீண்டும் முதல்வர் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்பாராத விதமாக பினராய் விஜயன் முதல்வராக அறிவிக்கப்பட்டார். இதனால், அச்சுதானந்தன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். அவரை திருப்பதிப்படுத்த கேபினட் அந்தஸ்துடன் கூடிய நிர்வாக சீர்திருத்த ஆணைய தலைவர் பதவி  அளிக்கப்பட்டது. 2016ம் ஆண்டு முதல் இந்த பதவியில் அச்சுதானந்தன் இருந்து வருகிறார்.  இந்நிலையில், வயது மூப்பு காரணமாக அவர் பதவியை ராஜினாமா செய்ய போவதாக சமீப காலமாக கூறப்பட்டு வந்தது. கடந்த மாதம் இவர் தனது அரசு இல்லத்தை காலி ெசய்தார். இந்நிலையில், நேற்று அவர் தனது ராஜினமா கடிதத்தை முதல்வர் பினராயிக்கு  அனுப்பி வைத்தார். இது ஏற்கப்பட்டு, அவர் விடுவிக்கப்படுவார் என அரசு தெரிவித்துள்ளது.

Related Stories: